Wednesday, December 18, 2024
Homeசிந்தனைகள்உங்கள் குழந்தைகளின் ஆன்மா சாதாரணமானதா? இல்லையா? இந்த அறிகுறிகளை வைத்து செக் பண்ணுங்க!

உங்கள் குழந்தைகளின் ஆன்மா சாதாரணமானதா? இல்லையா? இந்த அறிகுறிகளை வைத்து செக் பண்ணுங்க!

- Advertisement -
about-kid's-soul-kidhours
about-kid’s-soul-kidhours

 

- Advertisement -

வாழ்க்கையில் அனைத்து செல்வங்கள் இருந்தாலும் வாழ்க்கையை முழுமைபெறச் செய்வது என்னவோ குழந்தை செல்வம்தான். உங்கள் வாழ்க்கையை உயிரோட்டம் உள்ளதாக மாற்றுவதே அவர்கள்தான். குழந்தைகளை பற்றி பெற்றோர்கள் எப்பொழுதும் கூறும் புகார் அவர்கள் மகிவும் குறும்புக்காரர்களாகவும், முதிர்ச்சியற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதும்தான்.

பெரியவர்களை போலவே குழந்தைகளும் பழைய ஆத்மாவாக இருக்க வாய்ப்புள்ளது. ஆன்மாவின் சுழற்சியில் இப்படியும் நடக்கலாம். இதனால் அவர்களுக்கு பிரச்சினை ஒன்றும் ஏற்படப்போவதில்லை, அவர்கள் சற்று வித்தியாசமாக நடந்து கொள்வார்கள் அவ்வளவுதான். இளம்வயதிலேயே பெரியவர்களை போல நடந்து கொள்வார்கள். உங்கள் குழந்தையின் ஆன்மா பழைய ஆன்மாவா என்பதை அவர்களின் சில நடத்தைகளே கூறிவிடும்.

- Advertisement -
உலகை விட்டு வெளியே இருப்பார்கள்

எல்லா குழந்தைகளும் இந்த உலகத்தை விட்டு தனிஉலகத்தில்தான் வாழ்கின்றனர். ஆனால் சில குழந்தைகள் உண்மையிலேயே சிறிய வயதிலேயே உலகில் உயர்ந்த நிலையை அடைந்ததாக தெரியும். இவர்கள் கலகலப்பானவர்களாக இருந்தாலும் அமைதியாகத்தான் இருப்பார்கள். ஆனால் குறும்பில் எந்த குறையும் இருக்காது. அவர்களே தங்களை வித்தியாசமானவர்களாகத்தான் உணருவார்கள்.

- Advertisement -
கனவுகள்

இந்த குழந்தைகள் எப்பொழுதும் பீட்ஸா, விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை பற்றி கனவு காணமாட்டார்கள். மாறாக இயற்கை உணவுகள், உலக அமைதி, பெற்றோர்களின் ஒற்றுமை போன்றவற்றை பற்றி கனவு காண்பார்கள். இவர்களின் வாழ்க்கை இலட்சியங்கள் முற்றிலும் வேறானவை.

சூழலுக்கு பொருந்த போராடுவார்கள்

இதுபோன்ற ஆன்மாவுடைய குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் பழகுவதற்கு அதிக சிரமப்படுவார்கள். விளையாட்டு நேரம், பார்ட்டிகள் போன்றவை இவர்களுக்கு விரைவில் போரடித்துவிடும்.அதற்கு பதிலாக கண்காட்சி, அருங்காட்சியகம், வரலாறு தொடர்பான இடங்கள் அவர்களுக்கு அதிக ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கும். இவர்கள் அதிக குழந்தை நண்பர்களை வைத்து கொள்ளமாட்டார்கள்.

வயதானவர்களின் நட்பு

இந்த குழந்தைகள் தன் வயது குழந்தைகளுடன் அதிக நட்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள். மாறாக தன்னை விட வயதில் மூத்த குழந்தைகள், பெரியவர்களுடன் நாட்[உ வைத்துக் கொள்ளத்தான் விரும்புவார்கள். அவர்களுடன் அர்த்தமுள்ள உரையாடல்களில் கலந்து கொள்வார்கள்.

புத்திக்கூர்மை

இந்த வகை குழந்தைகள் அதிபுத்திசாலிகளாக இருப்பார்கள் தன் வயது குழந்தைகளுக்கு இவர்கள் சொல்லிக்கொடுப்பார்கள். சிலசமயம் இதனால் அவர்கள் சிக்கல்களில் கூட மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.

அர்த்தமுள்ள பேச்சுக்கள்

இந்தவகை குழந்தைகள் வேடிக்கையான உரையாடல்களிலோ அல்லது வாதங்களிலோ தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை நீங்கள் பார்க்க முடியாது. இதுபோன்றவற்றில் ஈடுபடுவது புத்திசாலித்தனமானது அல்ல என்று இவர்கள் அறிவார்கள்.

தனிமையான நேரம்

இந்த குழந்தைகள் எப்பொழுதும் மற்றவர்களுடன் விளையாடிக்கொண்டு இருக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக பெரும்பாலான நேரத்தை தனிமையில் கழிப்பார்கள். தனக்கு கிடைக்கும் பெரும்பாலான நேரத்தை உபயோகமான நேரமாக மாற்ற முயல்வார்கள். இதனால் அவர்கள் சோர்வாகவோ, மனஅழுத்தத்திலோ இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல, அவர்கள் தனிமையை விரும்புகிறார்கள் அவ்வளவுதான்.

அதிக கேள்விகள்

பழைய ஆன்மா உள்ள குழந்தைகள் அதிக கேள்வி கேட்பவர்களாக இருப்பார்கள். பறவைகள், விலங்குகளை பற்றியோ அல்லது அபத்தமான கேள்விகளையே கேட்கமாட்டார்கள். அர்த்தமுள்ள கேள்விகளையும், ஆன்மா மற்றும் மனது தொடர்பான கேள்விகளையும் கேட்பார்கள்.

பொறுப்பு

இந்த வகை குழந்தைகள் பொறுப்பானவர்களாகவும், பெரியவர்கள் இல்லாதபோது மற்றவர்களை கவனித்துக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் அற்பமான செயல்களில் ஈடுபடுவதில்லை, அர்த்தமுள்ள செயல்களில் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள்.

உதவி

இந்த வகை குழந்தைகள் மற்றவர்களுக்கு உதவுவதை அதிகம் விரும்புவார்கள். வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி இவர்களுக்கென கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்படும். இவர்களின் முதிர்ச்சிக்காக பல சமயங்களில் இவர்கள் கிண்டலுக்கு ஆளாக நேரிடலாம்.

பெற்றோருடன் நெருக்கம்

இவர்கள் பெற்றோருடன் அதிக நெருக்கம் காட்டுவார்கள். பெற்றோர்களின் மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பழிவாங்கும் எண்ணம் இவர்களுக்கு இருக்காது. மேலும் இயற்கையின் மீது இவர்களுக்கு தீராத காதல் இருக்கும்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.