Khanun Cyclone உலக காலநிலை செய்திகள்
தென் கொரியாவை புரட்டிபோட்டுள்ள கனுன் புயலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனுன் புயல் கரையை கடந்து இருக்கும் நிலையில், தென்கொரியாவில் சங்வோன் உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
தண்ணீரில் சிக்கிய பொதுமக்கள் 10,000த்திற்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே போல் மீட்புப் படை வீரர்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
![கனுன் புயலால் 350 விமானங்கள் மற்றும் 410 ரயில்கள் ரத்து Khanun Cyclone 1 Khanun Cyclone உலக காலநிலை செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/08/Untitled-design_20230811_213916_0000.jpg)
மழை மற்றும் வெள்ளப்பாதிப்பு காரணமாக 350 விமானங்கள் மற்றும் 410 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடலோர பகுதிகளில் மணிக்கு 6.சென்டி மீட்டர் மழை பெய்ததை கடும் வெள்ளப்பெருக்கிற்கு காரணம் என்று தென் கொரிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Kidhours – Khanun Cyclone
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.