World Elephant Day பொது அறிவு செய்திகள்
பல்லுயிர்ப் பெருக்கத்தில் முக்கிய அங்கமாக இருக்கும் உயிரினம் யானை. காடுகளில் தாவரங்கள் வளர முக்கிய பங்கு வகிக்கும் யானைகள், எண்ணற்ற உயிரினங்களுக்கும் உணவு கிடைக்க வழிவகை செய்கின்றன. உலகளவில் 50 ஆயிரம் ஆசிய யானைகள் உள்ள நிலையில், இதில் 27 ஆயிரம் யானைகள் இந்தியாவில் வாழ்கின்றன.. அதிலும், நீலகிரியை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டும் 6 ஆயிரம் யானைகள் உள்ளன.
பிரமாண்ட உருவம் கொண்டுள்ள போதும் சாதுவான விலங்காக காணப்படும் யானை, மனிதர்களிடம் நீண்ட நெடிய வரலாற்று தொடர்பை உடையது
யானைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும் விதமாக இன்று, உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆப்பிரிக்க, ஆசிய காடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலால் யானைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. யானைகளை பாதுகாக்கும் வகையில் வனங்களில் இயற்கை வளம் குன்றாமல் பாதுகாப்பது அவசியம் என பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (ஐயுசிஎன்) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வனப்பகுதிகளில் பல்வேறுவிதமான அச்சுறுத்தல் களால் யானைகள் உயிரிழக்கின்றன.
காடுகளில் பார்த்தீனியம், உன்னிச்செடி உள்ளிட்ட பலனற்ற தாவரங்கள் அதிகரித்துள்ளதால், யானைகளுக்கு தேவையான புற்கள், பசுமை உணவுகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. பருவமழை பொய்த்தல், காலநிலை மாற்றம், வறட்சி போன்றவற்றால் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையோர குடியிருப்புகளை நோக்கி யானைகள் கூட்டமாக வருகின்றன.
வன விதிகளை அத்துமீறும் கும்பலால் காடுகளில் ஏற்படும் தீவிபத்து, குவாரிகளில் கல் தோண்டுவது, யானை வசிப்பிடங் களில் மனித நடமாட்டம் அதிகரிப் பது போன்றவற்றாலும் யானைகள் காடுகளைவிட்டு வெளியேற வேண் டிய கட்டாயத்தில் உள்ளன. மலை யோர கிராமங்களுக்கு புகும் யானை கள் பழக்கமில்லாத ஆழமான பள்ளங்களில் விழுவது, ரயில் தண்ட வாளங்களை கடப்பது, மின்வேலி யில் சிக்குவது போன்றவற்றால் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுகின்றன.
யானைகளுக்கு தினமும் 150 கிலோ முதல் 200 கிலோ உணவு தேவை. இலைகள், மரப்பட்டைகள், புற்கள், மரக்குச்சிகளை அவை உண்கின்றன. 12 மணி நேரத்தில் இருந்து 18 மணிநேரம் உண் பதிலேயே நேரத்தை செலவிடு கின்றன. குடிப்பதற்கும், உடல் வெப்பத்தை தணிக்கவும் தினமும் 220 லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது. வறட்சி காலத்தில் இவை கிடைக்காதபோது, குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன.
எனவே, அனைத்து காலங்களி லும் வனங்களில் யானைக்கு தேவையான உணவு கிடைக்கும் வகையில் பழ மரங்களை உருவாக்க வேண்டும். வனத்துக்குள் ஆழ் குழாய்களும் அருகிலேயே தண்ணீர் தொட்டிகளும் ஏற்படுத்தி, வன விலங்குகளுக்கான தண்ணீர் தேவையைப் போக்க வேண்டும். வனங்களில், மனித இடையூறை கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் யானைகளை அழிவிலிருந்து தடுக்கலாம் என்றார்.
Kidhours – World Elephant Day
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.