Thirukkural 322 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
அறத்துப்பால் / துறவறவியல் / கொல்லாமை
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.”
உள்ள உணவையும் பலரோடும் பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல், அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது!
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
—மு. வரதராசன்
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.
—சாலமன் பாப்பையா.
!["பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்...." Thirukkural 322 1 Thirukkural 322 தினம் ஒரு திருக்குறள் கற்போம்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/06/thinam-oru-kural-kidhours-4-1-1-1-1-1.jpg)
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 322
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.