Saturday, October 26, 2024
Homeஉலக காலநிலைவிஞ்ஞானிகளின் உருகும் பனிப்பாறைகளை தடுக்க விசித்திரமான யோசனை Prevention of Melting Iceberg

விஞ்ஞானிகளின் உருகும் பனிப்பாறைகளை தடுக்க விசித்திரமான யோசனை Prevention of Melting Iceberg

- Advertisement -

Prevention of Melting Iceberg  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சவால்களில் ஒன்றாக இருப்பது புவி வெப்பயமாதல் என்ற சூழலியல் சிக்கல் தான். பூமியின் சராசரி வெப்பமானது ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல பேரிடர்கள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் தலையாய ஆபத்தானது பனிப்பாறைகள் உருகி கடல்நீர் மட்டும் உயர்வதே. உலகின் பல பகுதிகளில் இந்த ஆபத்தானது நிகழத் தொடங்கியுள்ளது.

- Advertisement -

சீனாவிலும் அப்படியொரு பனிப்பாறை உள்ளது. அங்குள்ள தென்மேற்கு பகுதியில் உள்ள டகு என்ற பனிப்பாறை கடந்த சில ஆண்டுகளாக வேகமாக உருகி வருகிறது. டாகு பனிப்பாறை என்பது ஒரு மிதமான பனிப்பாறை ஆகும், இதில் திரவ நீர் மற்றும் திடமான பனிக்கட்டி உள்ளது.

- Advertisement -

இந்த பனிப்பாறை லட்சக்கணக்கானோருக்கு நீர் ஆதாரமாக உள்ளது. அத்துடன் இங்கு ஆண்டு தோறும் சுமார் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பனிப்பாறை மற்ற பனிப்பாறைகளை விட வேகமாக உருகுவதால், சீனா அரசு இதை பாதுகாக்க பல ஆண்டுகளாக பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அதன்படி, தற்போது புதிய அணுகுமுறையை எடுத்துள்ளது.ஆம், இங்குள்ள விஞ்ஞானிகள் தென்மேற்கு சீனாவின் டாகு பனிப்பாறையை உருகாமல் பாதுகாக்க ஒரு வெள்ளை நிற ஷீட் (ஆடை) கவர் ஒன்றை தயாரித்து மூடி உள்ளனர். விஞ்ஞானிகள் இந்த ஷீட்டை மலையின் 4,300 சதுர அடி (400 சதுர மீட்டர்) பரப்பளவில் பொருத்தி வருகின்றனர். அந்நாட்டின் நான்ஜிங் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான ஜு பின் தலைமையிலான குழு இந்த பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த ஷீட் கவர்கள் மிகவும் விலையுயர்ந்த மற்றும் மேம்பட்ட ஜியோடெக்ஸ்டைல்களால் ஆனது எனவும் இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த திட்டத்தால் பனிப்பாறையை காப்பாற்ற முடியும் என சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பூமியில் கரியமில வாயு வெளியேற்றத்தை நிறுத்தும் வரையில் இது போன்ற திட்டம் தற்காலிக தீர்வு என கூறுகின்றனர்.

கடந்த அரை நூற்றாண்டில் பனிப்பாறை ஏற்கனவே 70% க்கும் அதிகமான பனியை இழந்துவிட்டது. பூமி நாளுக்கு நாள் வெப்பமடைந்து கொண்டே இருந்தால், இறுதியில் பனிப்பாறைகளை நிரந்தரமாகப் பாதுகாக்க வழியே இருக்காது என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்.

இந்த ஷீட் முறையைக் கொண்டு அவர்கள் தொடர்ச்சியான சோதனைகளை நடத்தி வருகின்றனர். விஞ்ஞானிகளின் சோதனையில் இந்த ஷீட் அமைப்புகள் 93 சதவீத சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன் கொண்டவே எனவும் இதன் காரணமாக பனிப்பாறி அதிக அளவில் வெப்பத்தால் உருவகுவது தடுக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prevention of Melting Iceberg  உலக காலநிலை செய்திகள்
Prevention of Melting Iceberg  உலக காலநிலை செய்திகள்

அதேவேளை, இப்படி ஷீட் கொண்டு மூடும் முறை பாதுகாப்பானது தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை இந்த சோதனை தொடரும் என்றும், அதன் பிறகு சீனாவில் உள்ள மற்ற பனிப்பாறைகளில் உள்ள ஷீட்களை பயன்படுத்தலாமா என்பதை விஞ்ஞானிகள் முடிவு செய்வார்கள்.

பனிப்பாறைகளை பிரதிபலிப்பு ஷீட் கொண்டு மூடுவது சீனாவின் புது யோசனை அல்ல. ஏற்கனவே, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற நடவடிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டது.

 

Kidhours – Prevention of Melting Iceberg,Prevention of Melting Iceberg update

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.