Thirukkural 295 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
அறத்துப்பால் / துறவறவியல்/ வாய்மை
“மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.”
மனத்தோடு பொருந்திய வாய்மையையே ஒருவன் சொல்லி வருவானானால், அவன் தவத்தோடு தானமும் செய்பவரினும் மிகவும் சிறந்தவன் ஆவான்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
—மு. வரதராசன்
உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.
—சாலமன் பாப்பையா
!["மனத்தொடு வாய்மை மொழியின் ...." தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 295 1 Thirukkural 295 தினம் ஒரு திருக்குறள் கற்போம்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/06/thinam-oru-kural-kidhours-4-1-1-1-1-1.jpg)
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.
—மு. கருணாநிதி
Kidhours- Thirukkural 295
தினம் ஒரு திருக்குறள் கற்போம்l
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.