World Fastest Warming Continent உலக காலநிலை செய்திகள்
உலகிலேயே மிக வேகமாக வெப்பமயமாகும் கண்டமாக ஐரோப்பா மாறி வருவதாக உலக காலநிலை அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வெப்ப அலைகளுக்கு ஐரோப்பா தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கடல் மேற்பரப்பு வெப்பநிலை அடையும் என்றும், வரலாறு காணாத பனிப்பாறை உருகுதல் மற்றும் வறட்சிக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980-களில் இருந்து, உலக சராசரியை விட ஐரோப்பா இரு மடங்கு வெப்பமடைந்து வருகிறதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் கடுமையான வெப்பம் காணப்பட்டது.
இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் கடுமையான வறட்சி, அதிக தீவிரமான வெப்ப அலைகள் மற்றும் புயல்கள் ஏற்பட்டதாகவும் உலக காலநிலை அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.