Discover Egg and Hen சிறுவர்களுக்கான உலக செய்திகள்
முதலில் கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா ? இந்த கேள்வியைத்தான் நூறாண்டுகளாக விளையாட்டாய் சிறுவர்களிடம் கேட்பதுண்டு. இதே கேள்விதான் பல அறிவியல் ஆராய்ச்சியாளர்களையும் பதிலைத் தேட வைத்துள்ளது.
இதற்கு பதிலை அறியும் முன்னர் விலங்கினங்கள் பற்றி நாம் பள்ளியில் கற்ற இயற்கை சூழலியல் பரிணாமத்தை சற்று திரும்பி பார்க்க வேண்டியிருக்கிறது.
320 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு amniotes எனப்படும் கருச்சவ்வுடைய நீர் வாழ் உயிரினங்கள் நீரிலிருந்து வெளியேறி நிலத்தில் வாழ்வதற்கேற்ப, நீரில்லா தட்பவெப்ப நிலைக்கேற்ப தங்களை பரிணமித்துக் கொண்டன. கருப்பையில் இருந்த முட்டைகள் தாமாகவே கருப்பையை குளமாக பாவித்து ஊர்வனவாய் நிலத்திற்கேற்றவாறு பரிணமித்து குட்டிகளாய் வளரத் தொடங்கியது தான் இதற்கு முழு காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதேபோன்று, முதுகெலும்புள்ள உயிரினங்களும் முதுகெலும்பில்லா உயிரினங்களும் ஒரே வகையான முன்னோரிலிருந்தே பரிணமித்தின எனவும் கூறுகின்றனர்.
இனப்பெருக்கத்தால் மீன்களின் துடுப்புகள் பரிணமித்து கால்களானதாகவும் இதுவே முதுகெலும்புள்ள நான்கு கால் உயிரினங்கள் நில, நீர் வாழ் உயிரினமாய், ஊர்வனவாய் பரிணமிக்க காரணம் என்கின்றனர் அறிவியலாளர்கள். இதே போலவே தவளை போன்ற உயிரினங்கள் கருச்சவ்வுடைய நீர் வாழ் உயிரினங்களாக பரிணமித்தன எனவும் குறிப்பிடுகின்றனர்.
கோழியா முட்டையா என்ற ஆராய்ச்சியில் 51 தொல்பொருள் படிமங்களும் 29 தற்கால முட்டையிடும், குட்டி ஈனும் உயிரினங்களும் உட்படுத்தப்பட்டுள்ளன. நீர்வாழ் உயிரினங்கள், நீர்நில வாழ் உயிரினங்கள், ஊர்வன, பறவைகள் என இனப்பெருக்கமாகி கோழியே முதலில் வந்தது என்பதை கிட்டத்தட்ட உறுதிபடுத்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
குறிப்பாக Extended Embryo Retention எனப்படும் கால சூழலுக்கு தகுந்தாற்போல தனது கருவை முட்டையிடுவது, முட்டையிட்டு குஞ்சு பொறிப்பது, குட்டி ஈனுவது என உயிரினங்கள் வகைப்பட்டுக் கொண்டன என்பதே அறிவியலாளர்களின் பதிலாய் உள்ளது. இனி யாரேனும் உங்களிடம் கேட்டால் முட்டை இல்லை கோழிதான் முதலில் வந்தது என்பதை விரைவில் உறுதிபட கூறும் வகையில் அறிவியல் கண்டுபிடிப்புகள் நம்மை வியக்க வைப்பதென்பதில் மாற்றுக்கருத்தில்லை.
Kidhours – Discover Egg and Hen
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.