Thirukkural 284 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
அறத்துப்பால் / துறவறவியல் / கள்ளாமை
“களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.”
களவு செய்வதிலே உண்டாகும் முதிர்ந்த விருப்பமானது, அதனால் வரும் விளைவுகளின் போது தீராத துன்பத்தைத் தருவதாகவே விளங்கும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
—மு. வரதராசன்
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.
—சாலமன் பாப்பையா
!["களவின்கண் கன்றிய....." தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 284 1 Thirukkural 284 தினம் ஒரு திருக்குறள் கற்போம்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/06/thinam-oru-kural-kidhours-4-1-1-1-1-1.jpg)
களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 284
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.