Laughing fee பொது அறிவு செய்திகள்
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உலகில் கொரோனா தொற்று உச்ச கட்டத்தை எட்டி லட்சக்கணக்கானோர் பலியான நிலையில் , மக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இதன் தாக்கத்தால் ஜப்பானியர்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்கள். கொரோனா பரவாமல் இருக்க அவர்கள் கடைபிடித்த முக கவசம் அணியும் பழக்கமும் அதன் ஒரு காரணம் என்று ஆராய்ச்சியில் கூறப்படுகிறது .
தொடர்ச்சியாக முக கவசம் அணிந்து அவர்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்களாம். ஜப்பானிய அரசு கொரோனா தொற்று கட்டுப்பாடில் இருந்து முக கவசம் அணிவதற்கு கட்டாயம் இல்லை என்ற போதும், இன்றும் பலர் முக கவசம் அணிந்து தான் வெளியே செல்கிறார்கள்.
அங்குள்ள 8 சதவீத மக்கள் மட்டுமே முக கவசம் அணிவதை நிறுத்தியுள்ளதாக கடந்த பெப்ரவரி மாதம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.