France Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரான்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்நாட்டில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.
இதையடுத்து, பிரான்ஸ் மந்திரி கிறிஸ்டோபர் பெச்சு இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என தெரிவித்துள்ளார். பிரான்ஸின் நிலப்பரப்பு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது மிகவும் அரிதானது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும், மின்சாரம் தடைபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அப்பார்ட்மென்ட் முழுவதும் அதிர்ந்ததுடன் அது சில நொடிகள் இது நீடித்ததாகவும் தான் இருந்த 3 ஆவது மாடி மண்ணில் புதைவதாக எண்ணியதாகவும் எனத் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 2000-ஆம் ஆண்டு இதுபோன்று சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
Kidhours – France Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.