World Oldest Parliament பொது அறிவு செய்திகள்
பாராளுமன்றம் என்பது
இந்த சொல்லை பிரித்து பொருள் அறியலாம்.
பார்+ஆளும்+மன்றம்.
பார் என்றால் உலகம் என பொருள். நாடு என்றும் கொள்ளலாம்.
ஆளுமை செய்யும் மன்றம் இரண்டும் தெளிவான சொற்களில் குறிப்பிடலாம்
நூறாண்டுகளையும் கடந்து கம்பீரமாக நிற்கும் உலகின் சில நாடாளுமன்ற கட்டிடங்களை
பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றம் லக்சம்பர்க் அரண்மனை மிகமிக அழகான நாடாளுமன்றக் கட்டிடங்களில் ஒன்று. இந்த கட்டிடம் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இத்தாலிய அரசியலின் மையமான பலாஸ்ஸோ மடமா, 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டிடமாகும். இது இன்னும் பெருமையுடனும் அழகுடனும் நிற்கிறது.
நெதர்லாந்தின் ஹேக் நகரில் கட்டப்பட்ட பின்னென்ஹாஃப் உலகின் மிகப் பழமையான நாடாளுமன்ற கட்டிடங்களுள் ஒன்று. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் 1584 ஆம் ஆண்டில் டச்சு குடியரசின் அரசியல் மையமாக மாறியது.
அதே போல், அமெரிக்க நாடாளுமன்றம் வாஷிங்டன் டிசியில் உள்ளது. அதன் பெயர் கேபிடல். இந்த கட்டிடம் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தின் பெயர் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை. இந்த கட்டிடம் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சீனாவின் நாடாளுமன்றம் மக்கள் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. பெய்ஜிங்கில் உள்ள இந்த கட்டிடம் 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நம் நாட்டின் நாடாளுமன்றம் ஆங்கிலேயே ஆட்சியின் போது 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
உலகின் மிகப் பழமையான நாடாளுமன்ற கட்டிடம் ஐஸ்லாந்தில் உள்ள எல்திங்ஹுயிசிட் ஆகும். இது 930 இல் கட்டப்பட்டது. ஆனால் இது பல முறை புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. அந்தக் கட்டிடம் இன்றும் செயல்பாட்டில் உள்ளது. ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டாலும், 63 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கூட்டங்கள், தீவின் தலைநகரான ரெய்காவிக் நகரில் அமைந்துள்ள பழைய கட்டிடத்திலேயே இன்றும் நடைபெறுகின்றன.
Kidhours – World Oldest Parliament
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.