Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்பத்து நாட்களில் 42 பேருக்கு தூக்கு Death Penalty

பத்து நாட்களில் 42 பேருக்கு தூக்கு Death Penalty

- Advertisement -

Death Penalty  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

மேற்காசிய நாடான ஈரான் பாரம்பரிய வரலாற்று பெருமை கொண்ட நாடு. பெர்சியா என அழைக்கப்பட்ட ஈரான் மிகப்பெரிய சாமராஜ்யமாக விளங்கிய நாடு. ஆனால் அண்மைக் காலமாக பல்வேறு அரசியல் குழப்பங்கள் அந்த நாட்டில் நிகழ்ந்து வருகின்றன.

தற்போது ஈரானின் அதிகாரமிக்க தலைவராக அயத்தொல்லாஹ் அலி கமெய்னி இருக்கிறார். அந்நாட்டில் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. சமீப காலமாக ஈரானில் தூக்கு தண்டனை உள்ளிட்ட மரண தண்டனைகள் விதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கடந்த பத்து நாட்களில் மட்டும் 42 பேர் தூக்கிடப்பட்டுள்ளதாக அந்நாட்டைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான IRH தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த பத்து நாட்களில் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவர் தூக்கிலிடப்பட்டு வருவதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

- Advertisement -

இப்படி தூக்கிலிடப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பலுச் பகுதியைச் சேர்ந்த சிறுபான்மையினர் என்கிறது அந்த அமைப்பு. அதே போல் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார். இதற்கு சுவீடன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது

Death Penalty  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Death Penalty  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

ஆனால் பெரும்பாலான தூக்குத் தண்டனைகள் போதைப் பொருள் வைத்திருந்ததற்காகத்தான் வழங்கப்பட்டுள்ளன. ஈரான் அரசின் மனிதத்தன்மையற்ற இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். ஆனாலும் ஈரான் அரசு தூக்கு தண்டனைகள் வழங்குவதை நிறுத்தவில்லை.

ஈரான் நாட்டில் குற்றச்செயல்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வரும் நிலையில், இதை மனித உரிமை அமைப்புகள் கண்டித்து வருகின்றன. இதுதொடர்பாக அந்த நாட்டில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் நாட்டில் இந்த வருடத்தில் மட்டும் 194 பேரை தூக்கிலிட்டுள்ளனர்.

 

Kidhours – Death Penalty

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.