Highest Punishment பொது அறிவு செய்திகள்
பொதுமக்களிடம் மோசடி செய்த வழக்கில் தாய்லாந்து தம்பதிக்கு 12,000 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அங்குள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இணையமூடாக பொதுமக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தம்பதிக்கு தலா 12,640 ஆண்டுக:ள் சிறை தண்டனை விதித்துள்ளது தாய்லாந்து நீதிமன்றம்.
2019ல் Wantanee Tippaveth மற்றும் இவரது கணவர் Methi Chinpha இணைந்து இணையமூடாக கவர்ச்சிகரமான திட்டமொன்றை அறிவித்து பொதுமக்களை தங்கள் நிறுவனத்தில் சேமிப்பு கணக்கை துவங்க தூண்டியுள்ளனர்.
நீதிமன்ற விசாரணையில் இவர்களுடன் இன்னும் 7 பேர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளனர். பேஸ்புக் மூலமாக தொடர்புகொண்ட இந்த தம்பதி, பொதுமக்களை தங்கள் சேமிப்பு திட்டத்தில் இணைய அழைப்பு விடுத்தனர்.
மேலும், ஒவ்வொரு முதலீடுக்கும் 93 சதவீதம் லாபம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர். இதனை நம்பி சுமார் 2,533 பேர்கள் இவர்களின் சேமிப்பு திட்டத்தில் இனைந்து முதலீடு செய்துள்ளனர்.
மொத்தமாக பல மில்லியன் டொலர்கள் தொகையை இவர்கள் திரட்டியுள்ளனர். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு வந்த நிலையில், இருவருக்கும் தலா 12,640 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் தொடர்புடைய தம்பதி தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதால், அவர்களின் தனடனை காலத்தை தலா 5,056 ஆண்டுகள் என நீதிமன்றம் குறைத்துள்ளது.
இருப்பினும், தாய்லாந்தின் சட்ட விதிகளின் படி ஒருவர் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் மட்டுமே சிறையில் இருக்க முடியும். இதனால் தற்போது Wantanee Tippaveth மற்றும் இவரது கணவர் Methi Chinpha ஆகிய இருவரும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க உள்ளனர்.
Kidhours – Highest Punishment
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.