World Safer Country பொது அறிவு செய்திகள்
தினைந்தாம் நூற்றாண்டுகளில் உலக நாடுகளை தங்கள் வசத்தில் எடுத்துக்கொள்ள பல படையெடுப்புகளை நடத்திய நாடுகளின் பட்டியலில் போர்த்துகல்லும் ஒன்று.
பழமைவாய்ந்த நாடு என்ற பெருமைமிக்க நாடான போர்த்துகல் தற்போது மிகவும் பாதுகாப்பான நாடு என்று பெயரையும் பெற்றுள்ளது. ஆனால் அதே நேரத்தில் உலகிலேயே அதிக மது அருந்துபவர்கள் அதிகமாக இருக்கும் நாடாகவும் போர்த்துகல் உள்ளது.
போர்த்துகல் நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனும் ஆண்டுக்கு சுமார் 52 லிட்டர் மது அருந்துகிறார்களாம். அதாவது வாரத்திற்குக் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் மது அருந்துகிறார்கள். அந்நாட்டில் இன்னொரு விநோதமான அம்சமும் ஒன்று உள்ளது. அங்கு ஒருவர் போதைப்பொருள் வைத்திருப்பது சட்டப்படி குற்றமில்லை.
ஆனால், போதைப்பொருள் வாங்குவதும் விற்பனை செய்வதும் குற்றம். இந்த சட்டம் 2001 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
இதன்படி ஹெராயின் போன்ற போதைப் பொருட்களை வைத்திருப்பதும் குற்றப் பிரிவின் கீழ் வராது. இந்தச் சட்டத்தின் விளைவு என்னவென்றால், இன்றைய தேதியில், போதைப்பொருள் கையாளும் வழக்குகள் குறைவாகப் பதிவாகும் ஐரோப்பிய ஒன்றியத்தில் போர்த்துகலும் ஒன்று.
இப்படி மது அருந்துவோர் இருந்தாலும், போதைப் பொருள் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் இல்லை என்ற நிலை இருந்தாலும் போர்த்துகலில் குற்ற நிகழ்வுகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.
Kidhours – World Safer Country
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.