SpaceX Missile உலக காலநிலை செய்திகள்
எலோன் மஸ்க் SpaceX-ன் ஸ்டார்ஷிப் ஏவுகணை
உலகின் மிகப்பெரிய ஏவுகணை சோதனை முயற்சி என்றும் சொல்லலாம். இது விண்வெளியை அடைந்து பூமியின் ஒரு பகுதி அளவிலான சுற்றுப்பாதையை நிறைவு செய்யும் என்று எடுத்துக் காட்டும் நோக்குடன் செலுத்தப்பட்டது. கடந்த வியாழன் அன்று காலை 8.33 மணிக்கு டெக்சாஸின் போகா சிகாவிலிருந்து ஸ்டார்ஷிப் புறப்பட்ட நான்கே நிமிடங்களில் அது வெடித்து சிதறியது.
“ஏவப்பட்ட சில நிமிடங்களில் ஏவுகணையில் இருந்து பூஸ்டர் பகுதியானது பிரிக்கப் பட வேண்டும். ஆனால், அவ்வாறு நடைபெறாததால் தான் ஏவுகணை கீழே விழ ஆரம்பித்தது. அதோடு, ஏவப்பட்ட 4 நிமிடங்களில் வெடித்து சிதறியது” என்று SpaceX அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது தவிர்த்து, இந்த அசம்பாவிதம் குறித்து அதிகாரிகள் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. சோதனை தோல்வியுற்ற ஒரு சில மணி நேரத்தில், மீண்டும் இந்த சோதனை ஒரு சில மாதங்களில் செய்யப்படும் என்று மஸ்க் ட்வீட் செய்தார்.
Kidhours – SpaceX Missile
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.