Mystery is light சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உக்ரைனின் தலைநகர் கியேவ்வின் வான்பரப்பில் காணப்பட்ட பிரகாசமான வெளிச்சம் என்ன என்பது குறித்த மர்மம் நீடிக்கிறது.
கியேவ் நகரின் வான்பரப்பில் நேற்று புதன்கிழமை இரவு 10.00 மணியளவில் பிரகாசமான வெளிச்சமொன்று காணப்பட்டதாக அந்நகர இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அது பூமியை நோக்கி வரும் என நாசா நிறுவனத்தின் செய்மதி ஒன்றாக இருக்கலாம் முதலில் கருதப்பட்டது. அதை நாசா நிராகரித்துள்ளது.ஓய்வு பெற்ற 300 கிலோகிராம் எடையுடைய தனது செய்மதி ஒன்று பூமிக்குத் திரும்பவிருப்பதாகவும் ஆனால், குறித்த நேரத்தில் அது விண்வெளியில் பூமியை சுற்றிவருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
மேற்படி பொருள் என்ன என்பது தொடர்பான மர்மம் நீடிக்கிறது.
Kidhours – Mystery is light
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.