China Building in Moon பொது அறிவு செய்திகள்
நிலவில் கட்டிடங்களை அமைப்பதற்கான கட்டுமான பணிகளை சீனா ஆரம்பிக்க தீவிரமாக தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனாவின் இந்த பணியில் 100 ற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் விண்வெளி ஒப்பந்ததாரர்கள் என பலர் அடங்கிய குழு ஈடுபட்டுள்ளதாக சீன ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் சீனாவின் உகானில் விஞ்ஞானிகள் மாநாடு ஹவாசோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
மாநாட்டில் நிலவில் அதிக நாட்கள் தங்கி வாழ்வதன் சாத்தியக் கூறுகளை மட்டும் ஆராயாது, நிலவில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டத்தில் சீனா செற்பட்டு வருவதாக மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சீனா வெற்றி பெருமாக இருப்பின் நிலவில் தளம் அமைக்கும் முதல் நாடு என்ற பெருமையை சீனா பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவ் விடயம் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
Kidhours – China Building in Moon
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.