continuously Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அந்தமான் நிகோபார் தீவு அருகே கடலுக்கு அடியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் நிகோபார் தீவில் உள்ள கேம்ப் பெல் பே (CAMP BELL BAY) என்ற பகுதியின் வடக்கில், நண்பகல் 1.15 மணி அளவில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 4 .9 ஆக பதிவானது.
இதனை தொடர்ந்து மதியம் 2.59 மணி அளவில் நிகோபார் தீவு அருகே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.1 ஆக பதிவானது.
3 ஆவது முறையும் நிகோபார் தீவு அருகே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5 .3 ஆக பதிவானது. 4வது முறையாக நிகோபார் தீவில் கடலுக்கு அடியில் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது.
Kidhours – continuously Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.