Amazing Sky சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28 ஆம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதன்படி புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன்,
யுரேனஸ் ஆகிய ஐந்து கிரகங்களும் பூமிக்கு அருகில் வரும் அரிய வானியல் நிகழ்வு, வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஐந்து கிரகங்களும் வில் வடிவத்தில் நமது கண்களுக்கு தெரியும் என்றும், புதன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை மட்டும் தொலைநோக்கி கொண்டு பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28-03-2023) நடந்தாலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, அந்த நிகழ்வானது அதற்கு முன் தினம் மற்றும் அடுத்த நாளும் வானத்தில் தெரியக்கூடும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்னர், 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக அந்த அரிய நிகழ்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தெரிந்தது.
அப்போது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவை தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Amazing Sky
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.