தற்காலத்தில் அனைவற்றிலும் தொழிநுட்பத்தை உற்புகுத்தியுள்ள உலகம் அந்த வகையில்
கலிபோர்னியா, அமெரிக்காவில் குற்ற சம்பவங்களை கண்காணிக்கும் நுட்பம் கொண்ட ரோபோக்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன . கலிபோர்னியா மாகாணத்தில் ‘ஹன்டின்டன்’ பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்வதால், அங்கு குற்றச்செயல்களும் அதிகமாக பதிவாகியுள்ளது எனவே இக்குற்றகுற்றச் செயல்களை கண்காணித்து, அது குறித்த தகவல்களை போலீஸ் தலைமையகத்துக்கு அனுப்ப திறமை கொண்ட எச்.பி.ரோபோ காப் என்ற ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எல்லா பக்கங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ரோபோ.
- பூங்காவுக்கு வருவோரிடம், ‘தயது செய்து வழிவிடுங்கள்
- இன்று நல்ல நாளாக அமையட்டும்’
என்று கனிவாக பேசுவதால் எல்லாரையும் கவர்கிறது. இதைத் தொடர்ந்து கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள முக்கிய தெருக்களில் கண்காணிப்பு பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதே போன்று பல முக்கிய இடங்களில் இவ்வாறன ரொபோக்களை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது இவ்வாறன தொழில் நூட்பம் எதிர்காலத்தில் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது