World Smallest Battleship சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஈரான் நாட்டில் இராணுவ அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், உலகின் முதல் மிகச் சிறிய வான்-பாதுகாப்பு படகை அந்த நாடு உருவாக்கியுள்ளது.புரட்சிகர காவலர் கார்ப்ஸ் கடற்படையால் உள்நாட்டு பயன்பாட்டிற்காக ஈரான் தயாரித்த முதல் வகையான கப்பல் இதுவாகும் என கடற்படை ஆய்வாளரும் OSINT நிபுணருமான HI Sutton அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படகிற்கு ‘சுல்பிகார்-கிளாஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING- IRAN reveals world’s first Air Defence Small Boat equipped with Nawab Short-range SAM System#IRAN #IRGC #missile #boat pic.twitter.com/eRfCrLfpsi
— EurAsian Times (@THEEURASIATIMES) March 10, 2023
ஈரான் இராணுவத்தில் உள்ள பல உபகரணங்களும் சுல்பிகார்-கிளாஸ் (Zulfiqar-class) என்ற பெயரில் இருப்பதால் குழப்பதை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இராணுவ படகு தனது செங்குத்து ஏவுகணை அமைப்பில் இருந்து குறைந்த தூர இலக்குகளை அடையும் நவாப் ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – World Smallest Battleship
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.