Honda Company Products சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அரசியல் மற்றும் பொருளதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது பாகிஸ்தான். மக்களின் அன்றாட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது பாகிஸ்தான் அரசு.
அங்கு நிலவும் பொருளாதார நெருக்கடியால் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டை திவால் ஆகவிடாமல் தடுப்பதற்காக சீனா மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவை உதவி செய்தாலும் அந்நாட்டின் மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய பாகிஸ்தான அரசால் முடியவில்லை
கடுமையான பொருளாதார நெருக்கடியால சிகேடி எனப்படும் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதிலும், இரும்பு, எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் இறக்குமதிகளிலும் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது பாகிஸ்தான் அரசாங்கம்.
மேலும் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனைகளில் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகள் பாகிஸ்தானில் பல்வேறு வெளிநாட்டு தனியார் நிறுவனங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதித்துள்ளது. அத்தகைய நிறுவனங்களுள் ஒன்றுதான் ஹோண்டா.
இந்த நிலையில் பாகிஸ்தானில் இயங்கி வரும் ஹோண்டா நிறுவனம் திடீரென தனது ஆலையை தற்காலிகமாக மூட இருப்பதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக ஹோண்டா நிறுவனம் கார் அசெம்பளி ஆலையை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாகவும் இதனை அடுத்து மார்ச் 9 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக பாகிஸ்தானில் உள்ள ஹோண்டா அட்லஸ் கார் நிறுவனம் மூடப்படும் என்று ஹோண்டா நிறுவனம் அந்நாட்டு ஸ்டாக் எக்சேஞ்ச் நிறுவனத்திற்கு ஹோண்டா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
Kidhours -Honda Company Products
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.