Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
உலகில் அடுத்த 10 ஆண்டுக்குள் இப்படிதான் இருக்கும் Global Change  - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Saturday, November 23, 2024
Homeசிறுவர் செய்திகள்உலகில் அடுத்த 10 ஆண்டுக்குள் இப்படிதான் இருக்கும் Global Change 

உலகில் அடுத்த 10 ஆண்டுக்குள் இப்படிதான் இருக்கும் Global Change 

- Advertisement -

Global Change  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகளவில் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என சில நாட்களுக்கு முன் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகமயமாக்கலின் மாயையால் உலக மக்கள் அனைவரும் கார்பரேட் நிறுவனங்களின் கைப்பாவை ஆகி விட்டோம்.ஒரு மனிதனுக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிப்பது கூட தற்போது கார்ப்ரேட்டின் கை வசம் தான் இருக்கிறது.

- Advertisement -

சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் அவர்களது பொருளை எளிதில் நம்மை மூளைச் சலவை செய்து விற்றுவிடுகிறார்கள்.

- Advertisement -

இந்த காலத்தில் தன்னுடைய பொருளாதார நிலையைக் கூட மறந்து அதிக செலவு செய்யும் நிலைக்குத் துரித உணவுகள் மனித மூளைகளை ஆட்கொண்டுள்ளன.
குடி, புகை இந்த பழக்கங்களை விட நாம் உண்ணும் துரித உணவு தான் உலகில் அதிகப்படியான நஞ்சை விதைக்கும் ஒன்றாக இருக்கிறதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

Global Change  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Global Change  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பதற்கும் துரித உணவே காரணம். துரித உணவால் வரும் 2035க்குள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் உடல் பருமனாகத் தான் இருப்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக உடல் பருமன் அட்லஸ் 2023ன் படி உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 12 ஆண்டுகளுக்குள் அதிக எடையுடன் இருப்பார்கள்.

இதனால் தனி மனிதனுக்கு உடல் அளவில் மட்டுமில்லாது மனதளவிலும் பாதிப்பு ஏற்படுவதோடு பொருளாதார பாதிப்பும் ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உடல் பருமனால் உண்டாகும் நோயைக் குணப்படுத்த வரும் 2035ம் ஆண்டிற்கும் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 4.32 டிரில்லியன் டாலர்கள் செலவாகும் எனத் தகவல் கூறுகிறது.

உடல் எடை பாதிப்பால் 3% உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் என்கிறார்கள். அதிக மக்கள் தொகை மற்றும் ஏழ்மையான நாடுகள் இதனால் அதிக பாதிப்பைச் சந்திக்கும். இதில் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் அடங்கும்.

உடல் பருமன் உள்ளவர்கள் கணக்கெடுப்பில் இந்தியா 99 இடத்தில் உள்ளது. மற்றும் 11% பேருக்கு மட்டுமே உடல் பருமன் அதிகமுள்ளது. இதில் 9.1% குழந்தைகளும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிக்கையை வெளியிட்ட உடல் பருமன் கூட்டமைப்பின் தலைவர் லூயில் பார் “உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களும், கொள்கை வகுப்பாளர்களும் இளைய தலைமுறையினருக்கு உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Kidhours – Global Change

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.