Philippines Earthquake புவியியல்
பிலிப்பைன்ஸின் தென் பகுதியை இன்று ( 07.03.2023 ) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது. மிண்டனாவ் தீவில் தாவோ டி ஓரோ மாகாணம் அருகே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் பூமிக்கு அடியில் 8 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்டத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளதாகவும் ஆங்காங்கே சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரம் இல்லாமல் சேதங்களைச் சரிசெய்யச் சிறிது தாமதமாகுவது தெரிகிறது. மேலும் கடந்த வாரம் இது போன்ற நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, நேற்றும் கூட நில அதிர்வு ஏற்பட்டதாகவும் அந்நாட்டுப் புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளனர்.
Kidhours – Philippines Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.