Thursday, November 21, 2024
Homeகல்வி15 பழமொழிகளும் விளக்கங்களும்

15 பழமொழிகளும் விளக்கங்களும்

- Advertisement -

பழமொழிகள்-palamolikal

- Advertisement -

1.ஏறச்சொன்னால் எருது கோபபம், இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்.
வெளிப்படையான விளக்கம்:-கால்கள் ஊன முற்ற ஒருவன் ஏர் பூட்டி உழவுத் தொழிலை நெய்யும் போது அவனால் ஏரை தள்ளிக் கொண்டே நடக்க முடியாது. அவனை எரில் ஏற்றினால் மாடு எடை தாளாமல் தள்ளும். அவனை இறங்கச் சொன்னால் அவன் கோபித்துக் கொள்வான். இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டிருப்பது ஏர்தான் என்பது தெரிகிறது. ஆகவே ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்கு கோபம். என்பது வெளிப்படையாக விளங்குகிறது.
உண்மை விளக்கம்:- ஒரு செயலை செய்யும் போது அது ஒரு தரக்கினருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். மற்றவர்களுக்கு கவளையை கொடுக்கும். அது இயற்கை எருதின் மேலே ஏறுவது தான் செயல். ஏறினால் எருதுக்கு வலிக்கும் ஊறவில்லை என்றால் நொண்டிக்கு வலிக்கும். ஆகமொத்தம் நாம் செய்யும் காரியம் ஒரு தரப்பினருக்கு நன்மையையும் இன் நெருதரப்பினருக்கு தீமையையும் கொடுக்கும் இதுவே இதன் உண்மைவிளக்கம்.

2.வரவரமாமியார் கழுதைப் போல ஆனாள்.
வெளிப்படையான விளக்கம்:-மாமியார் எப்போதும் கழுதையாவதில்லை. மருமகளை எப்போதாவது கழுதை என திட்வ துண்டு.ஆனால் இது உண்மை விளக்கம் அல்ல.
உண்மை விளக்கம்:- பழமொழியில் கழுதைக்கு பதிலாககயிதை என்று வர வேண்டும் கயிதை என்பது ஊமத்தனமே ஆகும். ஊமத்தம்பூ அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து அழகாய் பூத்து கடைசியில் கடின விஷமானமுள்ளாய் மாறி அவ்வப்போது துன்புறுத்துவதுபோல் மாமியார் ஆரம்பத்தில் அன்பாய் இருந்துபின் கொஞ்கம் கொஞ்கமாக கடினமாய் மாறுவதையே இப் பழமொழிகுறிக்கிறது.

- Advertisement -

3.ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
வெளிப்படையான விளக்கம்:-புராணங்களில் படிக்கும் போது அரகனுக்கு வரம் தந்து வாழ்வளிக்கும் பெண் தெய்வங்கள் பின் அந்த அரசனையே அழிக்கநேரிட்டதால் இவ்வாறு சொல்லப்பட்டது.
உண்மை விளக்கம்:- இப்பழமொழி உண்மையில் ‘நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும்’பெண்ணாலே என்று வந்திருக்க வேண்டும். காலப்போக்கில் இப்பழமொழிமருவிமருவி இவ்வாருஆகிவிட்டது.ஆகவேநல்லவைநடப்பதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே என இப்பழமொழியின் உண்மை விளக்கம் கூறுகின்றது.

- Advertisement -

4.நல்ல மாட்டிற்கு ஒரு சூடு
வெளிப்படையான விளக்கம்:-நல்ல மனிதர்களாக இருந்தால் ஒரு தடவை சொன்னாலே அதைப் புரிங்துக் கொண்டு நடப்பார்கள். எனும் அர்த்தத்தில் சொல்லப்பட்டர்
உண்மை விளக்கம்:- இப் பழமொழியில் சூடு என்று வந்த இடத்தில் சவடு எனவந்திருக்க வேண்டும். அக்காலத்தில் மாட்டை சந்தையில் வாங்கும் போது அது பதிக்கும் கால் தடத்தை வைத்தே வாங்குவார்கள். அதாவது மாட்டின் கால் தடத்தை வைத்தே அதன் பலத்தை கணிப்பார்கள். பரமான மாட்டின் சுவடுஅழுத்தமாக இருக்கும். அது ஒரு தடம் பதித்தாலே அதன் பலம் தெரிந்து விடும். இதுவே உண்மை விளக்கம்.

உள்ளுரில் ஓணான் பிடிக்காதவன்,உடையார் பாளையம் போய் உடும்புபிடிப்பானா?
வெளிப்படையான விளக்கம்:-உள்ளுரில் சிறு செயல் செய்யத் தெரியாதவன் முன் பின் தெரியாத ஊருக்குப் போய் இங்கு ஏதாவது பெரியவேலை செய்துக்காட்டவா போகிரான் என்பது வெளிப்படையான விளக்கம்.
உண்மை விளக்கம்:-உடையார் பாயைம் என்பது வன்னியக் குலசத்திரியர்கள் அரசாண்ட ஒரு சமஸ்தானம். ஊள்ளுரிலேயே சாதாரன மனிதன் என்று கருதப்படுபவன் எப்படி ஒரு சமஸ்தானமக்கள் முன் ஒரு வீரச்செயலை செய்துக்காட்ட முடியும் என்பதே இதன் உண்மை விளக்கம்.

5.கலமாவு இடித்தவன் பாவிகப்பி இடித்தவள் புண்ணியவதியா?
வெளிப்படையான விளக்கம்:-ஒரு கலம் மாவினை ஒருவள் இடித்துச் சலிக்க மற்றொருவள் கொஞ்சம் கப்பியை இடித்து விட்டு நல்லப்பெயர் எடுத்துக் அகாள்ளகிறால். இது வெளிப்படையான விளக்கம் ஆகும்.
உண்மைவிளக்கம்:-தன் நாத்தனார் குறித்த ஒரு மருமகளின் குறைதான் இது. வீட்டில் விசேஷம் என்றால் எல்லாவேலையையும் செய்வது மருமகலாகவே இருக்கும். ஆனால் மேம்போக்காக வேலைகளை செய்து விட்டு அம்மாவிடம் அதாவது இவள் மாமியாரிடம் பெயர் வாங்கிக்கொள்வது இவள் நாத்தனாராகத்தான் இருக்கும்.

6.இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது.
வெளிப்படையான விளக்கம்:-இமையின் குறைப்பாடுகளை அதனுள் இருக்கும் கண்கள் பார்க்கமுடியாது என்பது வெளிப்படைலயன விளக்கம்.
உண்மை விளக்கம்:-நம்முடைய நம்முடன் உறவாடிக் கொண்டிருந்தாலும் அதன் குற்றங்கள் நமக்குத் தெரிவதில்லை. அதுபோல இதன் குற்றம் கண்ணுக்குத் தொன்றாது. துன் முதுகில் உள்ள அழுக்கு தனக்குத் தெரியாது. இதுவே இதன் உண்மை விளக்கம்.

7.ஒற்றைக்காலில் நிற்கிறான்
வெளிப்படையான விளக்கம்:-ஒரு வேலையில் விடாமுயற்சியுடன் ஈடுப்படுபவனை குறித்தே இவ்வாரு சொல்வார்கள் என்பது நாம் அறிந்த விளக்கம்.
உண்மை விளக்கம்:-ஒற்றைக் காலில் என்பது அர்ஜுனன் கைலாயமலைக்குச் சென்று சிவனை நினைத்து பாசுபத அஸ்திரம் வேண்டி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தமையை குறிப்பதே இதன் உண்மை விளக்கம்.

8.கழுதைக்குபரதேசம் குட்டிச்சுவர்
வெளிப்படையானவிளக்கம்:-ஒருகுட்டிச்சுவரின் பக்கத்தில் நாள் முழுவதும் நின்றுக்கொண்டுபொழுதுபோக்குநவதுஇகழுதைக்குப் புனிதயாத்திரைபோவதுபோல. இதுவேவெளிப்படையானவிளக்கம் ஆகும்.
உண்மைவிளக்கம்:-குறுகியகுறிக்கோளில் திருப்திகாண்பவர்களைக் குறித்துச் சொன்னது இந்தபழமொழி. இதுவே இதன் உண்மைவிளக்கம் ஆகும்.

9.கொடுக்குறதோ உழக்குப்பால் உதைக்கிறதோ பல்லுப்போக
வெளிப்படையானவிளக்கம்:-ஒருஉழக்குப்பால்(கால் படிபால்)மட்டுமேகொடுக்கும் பசுஇஆனால் அதுபல் உழடயூம் அளவிற்கு. இதுவேவெளிப்படையானவிளக்கமம்.
உண்மைவிளக்கம்:-குறைந்த கூழி கொடுத்துஅளவில்லாமல் வேலைவாங்கும் ஒருஞ்கத்தனமான எஜமானைகுறித்தே இப்பழமொழி கூறப்பட்டது.

பழமொழிகள்-palamolikal

10.கைகாய்த்தால் கமுகுகாய்க்கும்.
வெளிப்படையான விளக்கம்:-கைகள் காய்த்துப் போகும் வரை தண்ணீர் விட்டால்தான் பாக்கு மரங்கள் காய்க்கும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.
உண்மைவிளக்கம்:-விடா முயற்சி வெற்றி தருவது மட்டுமல்ல இந்த விடா முயற்சிக்கு மிகுந்த உடல் வலிமை மனவலிமை வேண்டும் என்பது தான் இந்தப்பழமெழியின் உன்மை விளக்கம் ஆகும்.
11.வீடு வெறும் வீடு  வேலூர் அதிகாரம்.
வெளிப்படையானவிளக்கம்:-வீட்டில் காசுக்குவழியில்லைஆனால் அதிகாரமோவேலூர் நவாப் போல. இதுவே வெளிப்படையான விளக்கம் ஆகும்.
உண்மைவிளக்கம்:-வீட்டில் செலவுக்கு கொஞ்சம் பணமே கொடுப்பதே வழக்கமாக இருக்க  விருந்துனவு கேட்டுஅதிகாரம் செய்யும் கணவன் குறித்து மனைவி சொன்னது தான் இந்த பழமொழி இதுவே இதன் உண்மை விளக்கம்.

12.இக்கூழுக்காக இரு பத்தெட்டுநாமம்.

வெளிப்படையான விளக்கம்:-இமவ்வளவு ஆரவாரமான வழிப்பாட்டின் பிரசாதம் இந்தக் கூழ்தானா? ஏன்பது தான் இப்பழமொழியின் வெளிப்படையான விளக்கம்.

உண்மை விளக்கம்:-பசியால் வாடியசிவனடினார் ஒருவர் ஒரு வைஷ்ணவ கிராமத்தின் வழியே சென்றப் போது அங்கு பெருமால் கோவிலின் ஆரவாரத்தைக் கண்டு பசியைப்போக்க நல் உணவு கிடைக்கும் என நினைத்துதானும் திருநாமம் இட்டுக் கொண்டு வழிப்பாட்டிற்கு சென்றார். ஆனால் அவர் எதிர்ப்பார்த்த உணவு கிடைக்கவில்லை. அந்த ஏமாற்றத்தில் கூறியது தான் இப்பழமொழி இதுவே இதன் உண்மை விளக்கம்.

13.ஒண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்று
வெளிப்படையான விளக்கம்:-பிரம்மச்சாரியாகத் தனியாக இருப்பவனின் வாழ்க்கை வண்டியோட்டுபவன் ஒருவனது வாழ்க்கை போல என்பது இப்பழமொழியின் வெளிப்படையான விளக்காகும்.
உண்மை விளக்கம்:-பிரம்மச்சாரி ஓட்டுனர் இருவருமே நிலையாக ஒர் இடத்தில் தங்கமாட்டார்கள் என்பது தான் இதன் உன்மை விளக்கம்.

14.நேற்று வெட்டின கிணற்றிலே முந்ததனால் வந்த முதலைபோல
வெளிப்படையான விளக்கம்:-கிணரே நேற்றதான் வெட்டியதுஅப்படி இருக்கையில் அதில் முந்தநாள் முதலையை பார்த்ததாகச் சொல்வது எப்படி சார்த்தியம். இதுவே இதன் வெளிப்படையான விளக்கம்.
உண்மை விளக்கம்:-சமீபத்தில் தெரிந்துக் கொண்ட ஒரு விடயத்தை நீண்ட நாளுக்கு முதல் தெரிந்துக் கொண்டதைதப் போல பேசுபவர்களுக்காக இப்பழமெழி கூறப்பட்டது. இதுவே இதன் உண்மை விளக்கம்.

15.இராஜமுகத்துக்கு எலுமிச்சம்பழம்.
வெளிப்படையான விளக்கம்:-ராஜாவுக்கு எலுமிச்சைப்பழம் கொடுப்பது போல என்பது வெளிப்படையான விளக்கம்.
உண்மை விளக்கம்:-பெரியமகான்களைப்பார்க்கப் போகும் போதுஅவர்களுக்கு எலுமிச்சைப் பழம் கொடுக்கும் வழக்கம் இருந்தது. அதாவது எலுமிச்சைப்பழம் பெரிவர்களின் அறிமுகத்தைப் பெற்றுத்தரும். ஆதைப்பால திறமையுள்ளவர்கள் தாம் நினைப்பதை எளிதாகசிக்கனமாகமுடிப்பார்கள் என்பது இப்பழமொழியின் உண்மைவிளக்கம் ஆகும்.
16.கோல் ஆட குரங்கும் ஆடும்
வெளிப்படையானவிளக்கம்:-குரங்குஎவ்வளவூதான் கற்றிருந்தாலும் ஆடு என்றால் குரங்குதானாகஆடாது. கோலைக்காட்டிஆட்டினால்தான் ஆடும். ஏன்பதுவெளிப்படையானவிளக்கம் ஆகும்.
உண்மைவிளக்கம்:-நல்ல பழக்கங்களை நற்பண்புகளை ,நல்லொழுக்கங்களைவாயால் கற்றுக்கொடுத்தால் மட்டும் போதாதுகையிலும் கண்டிப்புடவேண்டும். அப்போதுதான் அதனை கடைப்பிடிப்பார்கள். என்பது உண்மை விளக்கம் ஆகும்.

17.அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப்பெண்ணும் சமைக்கும்.
வெளிப்படையான விளக்கம்:-ஐந்து சமயல்கபொருட்களும் மூன்று சமயல் தேவைகளும் அருகில் இருந்தால் ஒன்றும் அறியாத சிறுமி கூட மிகவும் எளிதாக மைத்துவிடுவாள். என்பது வெளிப்படையான விளக்கம்.
உண்மை விளக்கம்:-அஞ்சு என்பது சமையலுக்கு பயன்படும் மிளகு,உப்பு,கடுகு,தனியாபுளி மூன்று என்பது நீர் நெருப்பு விறகு. இது அனைத்தும் இருந்தால் சமயல் அறியாத பெண் கூட சமயல் கற்றுக்கொள்வாள். என்பது உண்மை விளக்கம்.

.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.