Change the Earth சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மார்ச் முதல் வாரத்தில் பூமியின் டெக்டோனிக் தகடுகளின் வலுவான இயக்கங்கள் ஏற்படக்கூடும் என ஈராக்கில் உள்ள பாக்தாத் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் ஒருவர் கணித்துள்ளார்.
பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் இடையே சந்திரன் வரும்போது டெக்டோனிக் தகடுகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
துருக்கிய சிரிய எல்லையில் நிலநடுக்கத்தை முதலில் கணித்த நெதர்லாந்து விஞ்ஞானி ஃபன்சா ஹூகர்பீட்ஸும் இதே கருத்தை ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.
இருப்பினும் கிரக நிலைகளின் அடிப்படையில் பூகம்பங்களை கணிப்பது பூகம்பங்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுருக்களுக்கு முரணானது என்று அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதேவேளை நேற்று (27) துருக்கியின் மாலத்யா நகருக்கு அருகில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 110 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் 29 கட்டிடங்கள் இடிந்ததாக துருக்கி அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 60,000 பேரைக் கொன்ற துருக்கி-சிரியா நிலநடுக்கத்திற்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
Kidhours – Change the Earth
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.