Turkey Village சிறுவர்களுக்கான உலக செய்திகள்
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்த கிராமம் இரண்டாகப் பிரிந்துவிட்டது. பிப்ரவரி 6 அன்று துருக்கியைத் தாக்கிய தொடர் பூகம்பங்கள் 45,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றதுடன் ஒரு கிராமத்தையே இரண்டாக்கிவிட்டது.
துருக்கி நாட்டில் உள்ள டெமிர்கோப்ரு என்ற கிராமம் இரண்டாகப் பிரிந்தது.
சுமார் 1,000 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் இறக்கவில்லை என்றும் ஆனால் சிலர் காயமடைந்தனர் என்று AFP செய்தி வெளியிட்டுள்ளது.
துருக்கி மற்றும் அண்டை நாடான சிரியா முழுவதும் 46,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற பேரழிவுகரமான நிலநடுக்கங்களுக்கு பிறகு டெமிர்கோப்ரு என்ற சிறிய கிராமம் இரண்டாகப் பிரிந்தது. சனிக்கிழமை (பிப்ரவரி 18) ஹடேயில் ஏற்பட்ட பெரிய விரிசலால் கிராமத்தில் விரிசல் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கிராமத்தில் உள்ள வீடுகள் நான்கு மீட்டர் (13 அடி) கீழே இறங்கிவிட்டன. “நிலம் எப்போதும் இருப்பதை விட கீழே இறங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது.
மக்கள் ஒரு காலத்தில் நடந்து சென்ற கிராமத் தெருக்களையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இடிபாடுகளின் எச்சமாக இருக்கிறது.
நிலநடுக்கத்திற்கு பிறகு பூமிக்கு அடியில் இருந்து தண்ணீர் மேலே வந்து, நிலங்களில் மேல் தேங்கி நிற்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.நடைபாதை சாலைகள் அனைத்தும் தகர்ந்துவிட்டன. கிராமத்தில் ஏற்பட்ட விரிசில, ஒரு கிராமத்தை இரண்டாக்கிவிட்டது.
Kidhours – Turkey Village
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.