Against to NATO சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அதிபர் விளாடிமிர் புடின் நேட்டோவுடன் ஒரு பெரிய போருக்கு முயற்சிக்கிறார் என்று ரஷ்ய நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
பிப்ரவரி 24 அன்று ரஷ்ய படையெடுப்பின் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்கோ ஒரு புதிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, புட்டினின் படைகள் கோட்டைகளை உருவாக்குவதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.
பேராசிரியர் கிரிகோரி யூடினின் கூற்றுப்படி,
உக்ரைன் மற்றும் மால்டோவா இரண்டையும் அழிப்பதன் மூலம் புடின் பெரிய போரை தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். பின்னர் கிழக்கு ஐரோப்பாவைக் கைப்பற்றி, கண்டம் முழுவதும் பனிப்போர் பாணியிலான நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புடின் முழு கிழக்கு ஐரோப்பாவையும் தனது ஃபிஃப்டமாக பார்க்கிறார் என பேராசிரியர் கிரிகோரி யூடினின் குறிப்பிட்டுள்ளார். போலந்து மற்றும் லிதுவேனியா போன்ற நாடுகளைக் காப்பாற்ற பெரிய மேற்கத்திய நாடுகள் போராடும் என்று நம்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரெம்ளின் தலைமையின் பார்வையில் இது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் என்ற மாயையில் இருந்து விடுபட வேண்டும் என்று அவர் கூறினார். உக்ரைன் இருப்பதாக ரஷ்ய தலைமை நம்பவில்லை. இல்லாததை எதிர்த்துப் போராடுவது சாத்தியமில்லை.
உக்ரைனில் நடக்கும் போர் உண்மையில் மேற்கு நாடுகளுக்கு எதிரானது. ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியத்தில் அல்லது அதன் செல்வாக்கு மண்டலத்தில் இருந்த போலந்து மற்றும் லிதுவேனியா போன்ற நாடுகளில் இருந்து நேட்டோவை பின்னுக்குத் தள்ள புடின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முழு கிழக்கு ஐரோப்பா மீதும்- விளாடிமிர் புடின் தனது அதிகாரத்தை பரப்ப முயற்சிக்கின்றார். ஏற்கனவே தற்போதைய இராணுவ நடவடிக்கையின் திட்டத்தில் மால்டோவாவை எடுப்பதுதான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது ரஷ்ய இராணுவம் மற்றும் அரசியல் தலைமையால் நீண்டகாலமாக தவிர்க்க முடியாததாகக் கருதப்பட்ட போர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kidhours – Against to NATO
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.