Wednesday, March 5, 2025
Homeகல்விகட்டுரை - பயந்த முதல் நாள்

கட்டுரை – பயந்த முதல் நாள்

- Advertisement -

katturai_கட்டுரை

- Advertisement -

அப்போது எல்லாம் பாடசாலை விடுமுறைக்கு எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம்  நான் மூன்றாம் வகுப்புபடிக்கும் போதே தனியாக ஊருக்கு சென்று வந்துவிட்டேன் பரிட்சை சமயத்தில் என் தாத்தா இறந்துவிட்டார் என்று சேதிவந்தது. அம்மாவும் அப்பாவும் உடனே ஊருக்கு பறப்படடுச் சென்றனர் நானும் என் தம்பியும் பரிட்சை எழுத வேண்டும் என்பதால் மதியத்திற்கு பிறகு மாமாவை அனுப்பி எங்களை அழைத்து கொள்வதாக முடிவு செய்தனர். ஆனால் நாங்கள் பரீட்சை முடிந்தவுடன் ஊருக்கு தனியாக புறப்பட்டு சென்றுவிட்டோம்.அன்று முதல் நான் தனியாக ஊருக்கு செல்ல அப்பா அனுமதிதந்தார்.
அன்று ஒரு நாள்பள்ளி விடுமுறையின் போது நான் ஊருக்கு புறப்பட்டேன் பேருந்தில் இருந்து இறங்கி இரண்டு கிழோமிட்டர் நடந்து செல்ல வேண்டும். எனது கையில் ஒருபை இருந்தது. ஆதில் அம்மா மாமா வீட்டிற்கு கொடுத்தனுப்பிய பொருட்கள், கூடவே திண்பண்டங்களும் இருந்தன. சரியாக பகல் ஒரு மணி இருக்கும். பேரூந்து தரிப்பிடத்தில் இறங்கினேன். அப்போது நிறுத்தத்தில் இரு பக்கங்களிளும் பெரிய ஆலமரங்கள் இரண்டு. அடர்ந்த விழுதுகள் தொங்கிக்கொண்டிருக்கும். அம்மரத்தின் உடம்பெல்லாம் ஆணிகளில் நிறப்பப்பட்டிருக்கும். கூடவே மிளகாய்,எழுமிச்சைப் பழம் முடி எல்லாம் சேர்த்து ஆணியால் அடிக்கப்பட்டிருந்தது. அப்போது இவையெல்லாம் எதற்காக அடித்திருக்கிறர்கள் என்று கூட சிந்திக்கத் தெரியாத வயது பேருந்தை விட்டு இறங்கினேன். வடக்கு தெற்காக அமைந்த அந்த தார் சாலையில் நடக்க தொடங்கினேன். இரு பக்கங்களிலும் கள்ளிச்செடிகள் அந்த சாலைக்கு வேலிகளாக அமைந்திருந்தது. சற்றுத்துரம் கடந்திருப்பேன். எனது இடது கை பக்க முள் வேலியில் எருமை மாடு சத்தம் கேட்டது மிகஅருகில் தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது ஏனென்றால் சத்தம் அருகிலே தெளிவாக ஒலித்தது. நமது ஊர்காரர்கள் யாராவது மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள் என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவிற்கு யாரும் இல்லை ஆனால் எருமை மாடும் அங்கு இல்லை. ஆனால் எருமை மாட்டின் சத்தம் மட்டும் காதை அடைக்கிறது. அச்சமயம் பயம் தோன்றிக் கொண்டது. விரைவாக நடந்தேன் என்பதை விட ஓடினேன் என்பதே பொருத்தமாக இருக்கும். எனக்கு நினைவுக்கு வந்தசாமிப் பெயர்களை எல்லாம் சொல்லிக் கொண் ஆட ஓட்டம் பிடித்தேன். எருமை மாட்டின் சத்தம் தொடந்து கேட்டுக் கொணடடே இருந்தது.

katturai_கட்டுரை

- Advertisement -

அப்படியே நானும் சத்தமும் ஒரு கிலோ மீட்டர் தொலை வானதார் சாலையை கடந்துவிட்டோம் இனி கிழக்கு மேற்காக அமைந்க மண் சாலைக்குமாற வேண்டும். நானும் மாறினேன் சத்தம் எனது இடது பக்கம் மாரியது. பயத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன் இப்பெழுது எனக்கு எந்த கடவுளின் பெயரையும் உச்சரிக்க முடிய வில்லை நடு நடுக்கம் தான் அதற்கு காரணம். பயத்தில் ஊர் வரை ஓடியே சேர்ந்துவிட்டேன் இதற்கிடையில் எனது வலது பக்கம் ஓரு கிணறு பார்த்துக் கொண்டே கடந்தேன். சிலஅடிகள் எடுத்து வைத்தவுடன் அந்த கிணற்றில் டமார் என்ற சத்தம் அத்துடன் எருமை மாட்டின் சத்தம் அடங்கியது.
மாமாவின் வீட்டை வந்தடைந்தேன்  அத்தையும் மாமாவும் வரவேற்றார்கள். நடந்ததைக் கூறினேன் அமைதியாக கேட்ட மாமா அது எல்லாம் ஒன்றும் இல்லை நீ போய் சாப்பிடு என்று அனுப்பினார். நானும் சாப்பிடத் தொடங்கினேன். அப்போது எனது உறவினர் வீட்டு தாத்தா ஒருவர் பேசத் தொடங்கினார். அந்த ஆலமரத்தில் அடிக்கப்பட்ட ஆணிகள் எல்லாம் பேய் விரட்டிகள் பேயை விரட்டி வந்து அடித்த ஆணிகள். அங்கு எப்போதும் பேய்களின் நட மாட்டம் இருந்துக் கொண்டேதான் இருக்கும். நமது ஊரில் யாரேனும் மருத்துவமனையிலே இறந்து ஊருக்குள் கொண்டு வந்தால் அந்தபேய்கள் எல்லாம் அவர்கள் கூடவே வந்துவிடும். பின்னர் அவைகளை அந்த ஆல மரத்தில் அடக்கி விடுவோம் என்று கூறினார். கூடவே வழியில் ஒரு மின் மாற்றிபொருத்திய மின் கம்பத்தில் வீட்டுத் தகராறு காரணமாக இளைஞன் ஒருவன் ஏறிமின் கம்பிகளைப் பிடித்து இறந்து விட்டதாகவும் அவனுடைய ஆவியும் அங்குதான் சுற்றித்திரிவதாகவும் சொல்லி முடித்தார் எல்லாம் கேட்டு விட்டு பயத்தோடு துங்கச் சென்றேன். பின் கடுமையான காய்ச்சல் போட்டு வாட்டியது. மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றதோடு சாமியாரிடம் அழைத்துச் சென்று மந்திரித்து திருநீறு அணிவித்தனர். மறு நாள் காய்ச்சல் சரியானது. ஆன்றுதான் நான் பயந்த முதல் நாள். அன்றய நாளை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.