birth rate in Japan பொது அறிவு செய்திகள்
ஜப்பானில் குறைந்த பிறப்பு விகிதம் ஒத்திவைக்க முடியாத ஒரு பிரச்சினையாக உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின்படி, உலக மக்கள் தொகை 2030 ஆம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என்று கணக்கிட்டுள்ளது. மேலும், இது 2080களில் சுமார் 10.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் என்றும் 2100 வரை அந்த நிலையில் இருக்கும் என்றும் அறிக்கையின் மூலம் தெரிவித்து உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவை இந்தியா விஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2022 இல் தலா 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன், சீனாவும் இந்தியாவும் இந்த பிராந்தியங்களில் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளன.
அறிக்கையின்படி, சீனாவின் 1.426 பில்லியனுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 1.412 பில்லியனாக உள்ளது. இது 2023 ஆம் ஆண்டில் இந்தியா சீனாவை மிஞ்சும் என்றும், 2050 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 1.668 பில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இதற்கு நேர்மாறாக ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. ஜப்பானில் வயது வந்தோரின் எண்ணிக்கையானது சமீபகாலமாக வேகமாக அதிகரித்து வருவதாக அந்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்படி 65 வயதிற்கு மேற்பட்ட ஜப்பானிய முதியோர்கள் 34 மில்லியன் பேர் அந்நாட்டில் உள்ளனராம். இது ஜப்பானிய மக்கள் தொகையில் 27 சதவீதமாகும். ஜப்பானில் குடும்ப கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு, ஜப்பானியர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவையே அந்நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஜப்பானின் குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் வயதான மக்கள்தொகை ஆகியவை சமூகத்திற்கு அவசர ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்று பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று தெரிவித்துள்ளார். ஒரு புதிய அரசாங்க நிறுவனத்தை நிறுவுவதன் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும் என அவர் உறுதியளித்தார்.
பிரதமர் கிஷிடா புதிய நாடாளுமன்றக் கூட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் கொள்கை உரையில் கூறும்போது, ‘‘பல வளர்ந்த நாடுகளில் பிறப்பு விகிதங்கள் குறைந்து வருகின்றன, ஆனால் உலக வங்கி தரவுகளின்படி, சிறிய மாநிலமான மொனாக்கோவிற்கு அடுத்தபடியாக, 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் உலகின் இரண்டாவது மிக உயர்ந்த விகிதத்தில் ஜப்பானில் இந்த பிரச்சினை உள்ளது.
கடந்த ஆண்டு பிறப்புகளின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளது. ஒரு சமுதாயமாக நாம் தொடர்ந்து செயல்பட முடியுமா என்ற விளிம்பில் ஜப்பான் நிற்கிறது. குழந்தைகள் மற்றும் குழந்தை வளர்ப்பு தொடர்பான கொள்கைகளில் கவனம் செலுத்துவது காத்திருக்க முடியாத மற்றும் ஒத்திவைக்க முடியாத ஒரு பிரச்சினை.
Kidhours – birth rate in Japan
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.