Wednesday, November 27, 2024
Homeசிறுவர் செய்திகள்விலங்கைப்போலவே தன்னை மாற்றிக்கொள்ளும் பெண் Like Animal

விலங்கைப்போலவே தன்னை மாற்றிக்கொள்ளும் பெண் Like Animal

- Advertisement -

Like Animal Women சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஒரு சிலர் செல்ல பிராணி வளர்ப்பதில் உச்சநிலைக்கு சென்று அந்த விலங்கைப்போலவே தன்னை மாற்றிக்கொள்ள ஆசைப்படுவர்.

இவர்களை “தேரியன்கள்” (therians) என்று அழைக்கின்றனர். இவர்கள் தங்களை ’மனிதனல்ல விலங்கு’ என்றே பாவித்துக்கொள்கின்றனர்.

- Advertisement -

அதுபோன்ற விசித்திரமான ஒருவர்தான் டியாமட் ஈவா மெடூசா. இவர் அதீத உடல் மாற்றங்களை செய்து தன்னை ஒரு விலங்கு போலவே மாற்றியிருக்கிறார்.அதவாது உயிருடன் இருக்கும் விலங்குபோல் இல்லை புராண கதைகளில் வரும் ட்ராகன் போல் தன்னை மாற்றி அமைத்திருக்கிறார் மெடூசா.

- Advertisement -
Like Animal Women சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Like Animal Women சிறுவர்களுக்கான உலக செய்திகள்

தன்னை ட்ரான்ஸ் பெண் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் மெடூசா, காது, மூக்கு, நாக்கு என அனைத்தையும் மாற்றி அமைத்துள்ளார்.

முன்னாள் வங்கி ஊழியரான இவர் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மூலம், காது மற்றும் மூக்கு துவாரங்களை நீக்கி, கண்களை பச்சை நிறமாக்கி, தனக்கு கொம்பும் வைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான பவுண்டுகளை செலவழித்து தனது நாக்கை ஃபோர்க் போல் மாற்றியுள்ளார்.
தலை, முகத்தில் கட்டுவிரியன் பாம்பு போன்றும் மற்றும் உடல் முழுவதுமே டாட்டூக்களை குத்தி தன்னை முழுக்க முழுக்க ஒரு ட்ராகன் போலவே மாற்றி அமைத்துள்ளார்.

மெடூசா குறித்து கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அதில், மெடூசா அமெரிக்காவிலுள்ள ஆரிசோனா மாகாணத்தில் ரிச்சர்டு ஹெர்னாண்டஸாக பிறந்துள்ளார்.
பின்னர் அறுவைசிகிச்சை மூலம் பெண்ணாக மாறி டியாமட் ஈவா மெடூசாவாக உருவாகியுள்ளார். ஆனால் அப்போதும் பாகுபாடு, துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளார் மெடூசா.

அதன்பிறகு மனிதர்களுடனான தொடர்பை முறித்துள்ளார். முதலில் கனவுகளில் பாம்புகள் வரத்தொடங்கியதே தன்னுடைய இந்த பயணத்துக்கும் மாற்றத்துக்கும் காரணம் என்று கூறியுள்ளார்.

”நான் உண்மையான மற்றும் நிஜத்தில் வாழும் ’மனித ஜந்து’, அதாவது ’பாதி மனிதன், பாதி மிருகம்’ என நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

Kidhours – Like Animal Women

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.