Work From Home சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கொரோனா தொற்றுநோய் காலத்தில் அலுவலகங்கள் இயங்க முடியாத சூழலில் பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சார உருவானது. அதில் ஒரு சிலரது வேலை நேரம் நேரில் சென்று செய்வதை விட அதிகமானது. சிலர் வேலை செய்யாமல் கணக்கு காட்ட பழகினர். அப்படி ஷிப்ட் நேரத்தில் வேலை செய்யாமல் இருந்த பெண்ணை ஆதாரத்தோடு வேலையை விட்டு தூக்கியுள்ளது ஒரு நிறுவனம்.
வீட்டில் இருந்து வேலை செய்யும் போது வீட்டில் உள்ளவர்களையும் வீட்டில் உள்ள பணிகளையும் பார்த்து கொண்டே வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு சிலர் அதை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். இதனால் ட்விட்டர் போன்ற பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்த ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்பச் சொன்னது.
இன்னும் சில நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கின்றன. அப்படிப்பட்ட பிரிட்டிஷ் கொலம்பியாவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம், வீட்டிலிருந்து வேலை செய்வதை அனுமதியுள்ளது. கூடவே வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் தங்கள் ஷிப்ட் நேரத்தில் வேலை செய்யாமல் இருப்பதைக் கண்டறிய ஒரு மென்பொருளையும் உருவாக்கியுள்ளது.
நிறுவனம் டைம்கேம்ப் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களின் வேலை நேரத்தைக் கண்காணித்துள்ளது. அப்போது கார்லீ பெஸ்ஸே என்ற பெண் வேலை செய்யும் போது நேரத்தை வீணடிப்பதைக் கண்டறிந்தது. அவரை வேலையிலிருந்து நீக்கியதோடு வேலை நேரத்தை வீணடித்ததற்காக ரூ.3 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
கணக்காளராகப் பணிபுரிந்த பெஸ்ஸே 50 மணி நேரம் வேலை செய்ததாக கணக்கு காட்டியுள்ளார். ஆனால் பெரும்பாலான நேரம் வேலை செய்யவில்லை. வேலை நேரத்தின் போது வேலை செய்யாமல் விலகியிருப்பதை மென்பொருள் கண்டறிந்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து அவரை வேலையில் இருந்து நீக்குவதாக நிறுவனம் தெரிவித்தது.
பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, அந்தப் பெண் தனது முன்னாள் முதலாளி தன்னை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்ததாகவும்,கொடுக்கப்படாத ஊதியம் மற்றும் வேலையில் இருந்து விலக்கியதற்காக சுமார் ரூ. 3.03 லட்சம் கேட்டதாகவும் அவர் கூறினார். அதற்கு வேலை நேரத்தில் செய்த வேலையின் அளவு குறித்து நிறுவனம் கேள்வி எழுப்பியது.
பிறகு, அந்த பெண் தனது பணிக்கும் தனிப்பட்ட நேரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை மென்பொருள் சரியாக அடையாளம் காணவில்லை என்று கூறினார். ஆனால் நிறுவனம் பெண்ணின் கூற்றுகளை நிராகரித்தது மற்றும் மென்பொருளின் செயல்திறனை நிரூபித்தது. அதைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு ரூ.3 லட்சத்தை முன்னாள் முதலாளியிடம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
Kidhours – Work From Home
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.