Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the rank-math domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kidhou5/public_html/wp-includes/functions.php on line 6114
காலநிலை மாற்றத்தால் ஆபத்தான நிலையில் 42,000 உயிரினங்கள்- Climate Change WWF - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
Monday, November 25, 2024
Homeசிறுவர் செய்திகள்காலநிலை மாற்றத்தால் ஆபத்தான நிலையில் 42,000 உயிரினங்கள்- Climate Change WWF

காலநிலை மாற்றத்தால் ஆபத்தான நிலையில் 42,000 உயிரினங்கள்- Climate Change WWF

- Advertisement -

Climate Change WWF  உலக காலநிலை செய்திகள்

- Advertisement -

உலகில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகள் மற்றும் தாவர இனங்கள், உலக பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) ஆபத்தான உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் உள்ளதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு WWF லிவிங் பிளானட் அறிக்கை, உயிரினங்களில் வியத்தகு சரிவைக் காட்டுகிறது. 1970 ஆம் ஆண்டிலிருந்து கவனிக்கப்பட்ட காட்டு இனங்களின் எண்ணிக்கை சராசரியாக 69 சதவிகிதம் குறைந்துள்ளது. இயற்கை பாதுகாப்பு அமைப்பு “உலகளாவிய இனங்கள் அழிவின் பேரழிவு மோசமடைந்து வருகிறது” என்று எச்சரித்துள்ளது.

- Advertisement -
Climate Change WWF  உலக காலநிலை செய்திகள்
Climate Change WWF  உலக காலநிலை செய்திகள்

இதுதொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள ஆண்டு அறிக்கையில், பனிமான், எம்பெரர் பென்குயின்கள் உள்ளிட்டவை சிவப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ரஷ்யாவின் வடக்கு பகுதியான டைமிர் பகுதியில் வசிக்கும் பனிமான்கள், கடந்த 2000 ஆம் ஆண்டில் 10 லட்சமாக இருந்த நிலையில், தற்போது, நான்கில் ஒரு பகுதியாக குறைந்து விட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று, எம்பெரர் பென்குயின் இனங்கள் அழிவை நோக்கி செல்வதாகவும், 2100ம் ஆண்டளவில் முற்றிலும் அழிந்து போகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றமும், வேட்டையாடுதலுமே இதற்கு முதன்மை காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நேபாள புலிகளின் எண்ணிக்கையும், ஆஸ்திரேலியாவில் ஹம்ப்பேக் திமிங்கலங்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் உலகளாவிய நிதியத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அவற்றின் எண்ணிக்கை 1,500 முதல் 40,000 – 65,000 வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Kidhours – Climate Change WWF

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.