Thirukkural 110 தினம் ஒரு திருக்குறள் கற்போம்
அறத்துப்பால் / இல்லறவியல் / செய்ந்நன்றி அறிதல்
”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”
![''எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்.....'' தினம் ஒரு திருக்குறள் கற்போம் Thirukkural 110 1 Thirukkural 110 தினம் ஒரு திருக்குறள் கற்போம்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/12/thinam-oru-kural-kidhours-4-1.jpg)
எந்த நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்; ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
—மு. வரதராசன்
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை
—சாலமன் பாப்பையா
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 110
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.