Canada Students Innovation சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவில் 8ம் தரத்தில் பயிலும் இரண்டு மாணவர்கள் வியத்தகு கண்டு பிடிப்பு ஒன்றை செய்து அசத்தியுள்ளனர்.
வான்கூவாரைச் சேர்ந்த போப் லாயூ மற்றும் ப்ராசர் டுக் ஆகிய இரண்டு மாணவர்கள் இந்த கண்டு பிடிப்பினை மேற்கொண்டுள்ளனர்.
சுயமாக வெப்பமாகக் கூடிய ஓர் உயிர்ப்பு காப்பு அங்கியை இந்த மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
பருவ நிலை மாற்றத்துடன் நீர் நிலைகளின் வெப்பநிலை மிகவும் குறைந்து விடுவதனால், அவற்றில் நீந்த முடியாத நிலைமை ஏற்படுகின்றது.
மேலும் நீரில் தவறி விழுந்தாலும் உயிர் காப்பு அங்கிகள் இருந்தாலும் அதிக குளிர் காரணமாக உயிராபத்து ஏற்படும் சாத்தியங்களும் காணப்படுகின்றன.
இவ்வாறான ஓர் பின்னணியில் குறித்த இரண்டு மாணவர்களும் சுயமாக வெப்பமாகக் கூடிய உயிர் காப்பு அங்கியை கண்டு பிடித்துள்ளனர்.
இந்த உயிர் காப்பு அங்கிக்குள் கல்சியம் க்ளோரைட் என்ற இரசாயனம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இது நீருடன் தொடர்புறும் போது வெப்பமடைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கண்டு பிடிப்பிற்காக B.C. Science Fair Foundation என்ற அமைப்பு விருது வழங்கியுள்ளது.
இந்த உயிர் காப்பு அங்கி 30 முதல 40 நிமிடங்கள் வரையில் வெப்பத்தை வழங்க கூடியது என தெரிவிக்கப்படுகின்றது.
கண்டு பிடிப்பினை மேற்கொண்ட மாணவர்களுக்கு 5000 டொலர் பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
Kidhours – Canada Students Innovation
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.