Friday, November 29, 2024
Homeகல்விபுவியியல்விண்கல்லில் புதைந்துள்ள பூமின் பெரும் ரகசியம் Secret of Earth

விண்கல்லில் புதைந்துள்ள பூமின் பெரும் ரகசியம் Secret of Earth

- Advertisement -

Secret of Earth புவியியல்

- Advertisement -

அசாமில் கிடைத்த விண்கல்லில் பூமியின் தொடக்கம் பற்றிய இரகசியம் மறைந்துள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரிய குடும்பத்தில் உயிரினங்கள் தோன்றியதற்கான அடிப்படை விசயங்கள் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன், கார்பன், சோடியம், மாங்கனீசு மற்றும் கந்தகம் ஆகியவை முக்கிய தனிமங்களாக உள்ளன.

- Advertisement -

இவை ஆவியாக கூடிய தன்மையையும் கொண்டுள்ளன. பாறைகளில் இவை காணப்படும். அதிக வெப்பநிலையில் பாறையில் இருந்து அவை நழுவி செல்லும். அப்போது பாறைகளின் மேற்பகுதியில் துளைகள் உருவாகும்.

- Advertisement -

இந்த துளைகளை ஒரு கருவியாக உபயோகப்படுத்தி, வாயுக்கள் வெளியேற்றத்தின் இயக்கமுறை, அளவு மற்றும் பாறையில் இருந்து ஆவியானவற்றின் வகைகள் ஆகியவற்றை புரிந்து கொள்ள முடியும்.

Secret of Earth புவியியல்
Secret of Earth புவியியல்

இந்த ஆராய்ச்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அசாமில் கிடைத்த விண்கல் அமைந்துள்ளது.

அசாமின் கோலாகட் மாவட்டத்தில் காமர்காவன் நகரம் உள்ளது. இந்த நகர் அருகே பூமியின் அடர் வளிமண்டலத்தின் வழியே விண்கல் ஒன்று நுழைந்து விழுந்துள்ளது.

அசாமில் கிடைத்த விண்கல்லானது, செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்து வந்தது ஆகும். 6.4 கிலோ மீட்டர் அளவுள்ள குறுங்கோள் மற்றொரு விண்கல்லுடன் அதிவேக திசைவேகத்தில் மோதியுள்ளது.

இதில் குறுங்கோளில் இருந்து சில துண்டுகள் உடைந்து பூமியில் விழுந்துள்ளன. அவற்றில் எரிந்தது போக, தப்பி பிழைத்த விண்கல்லே காமர்காவன் விண்கல்லாக நமக்கு கிடைத்துள்ளது.

இந்த மோதலில் கிடைத்த விண்கல்லானது, அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பநிலை சூழலை எதிர்கொண்டு, அதிர்வுகளையும் தாங்கியுள்ளது.

கோள்கள் மற்றும் குறுங்கோள்களின் மேற்பரப்பில் ஏற்படும் மோதல் நிகழ்வுகளானது, சூரிய குடும்பத்தில் நட்சத்திரங்கள், சந்திரன், கோள்கள் உள்ளிட்ட விண்ணுலக பொருட்களின் உருவாக்கம் மற்றும் பரிணாமம் ஆகியவற்றின் அடிப்படை விசயங்களாக உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அசாமில் கிடைத்த விண்கல்லில் கந்தகம், சோடியம், இரும்பு போன்ற பொருட்களுக்கான சான்றுகள் காணப்படுகின்றன.

இவை, பூமி தோன்றியது எப்படி என்பது பற்றிய ஆய்வுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐ.ஐ.டி. காரக்பூரின் புவிஅறிவியல் மற்றும் புவிஇயற்பியல் துறையை சேர்ந்த சுஜய் கோஷ் கூறுகிறார்.

இதனால், பூமியின் தோற்றம் பற்றிய விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு, விண்கல்லில் புதைந்துள்ள ரகசியங்கள் விடை அளிக்க கூடும் என கூறப்படுகிறது.

 

Kidhours – Secret of Earth

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.