Planet Saturn பொது அறிவு செய்திகள்
விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது விண்வெளியில் எடுக்கப்பட படங்கள் மற்றும் அரிய காணொளிகளை வெளியிட்டு வருகிறது.
![சனி கிரகம் தொடர்பில் நாசா அற்புதம் Planet Saturn 1 Trip to Moon சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/12/Untitled-design-61.jpg)
வின்கலத்தின் மூலமாகவோ அல்லது தொலைநோக்கிகளின் மூலமாகவோ எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களும், காணொளிகளும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இருக்கும்.
இந்த நிலையில் நாசா, சனி கிரகத்தின் அரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சூரியன் பின்னாலிருந்து ஒளி வீச, சனிக்கிரகத்தின் நிழலில் இருந்து கடந்த 2012 ஆம் ஆண்டில், காசினி விண்கலத்தால் எடுக்கப்பட்ட இந்த அற்புதமான புகைப்படத்தை இணையவாசிகள் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.