Thursday, November 14, 2024
Homeசிறுவர் செய்திகள்வானில் பறந்த மர்ம பொருள்.. ஏலியன்களா..? வீடியோ Aliens Videos

வானில் பறந்த மர்ம பொருள்.. ஏலியன்களா..? வீடியோ Aliens Videos

- Advertisement -

Aliens Videos சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விகராபாத் மாவட்டத்தில் மார்பள்ளி கிராமத்தில் மர்ம பொருள் ஒன்று வானில் பறந்துள்ளது.

தொடர்ந்து அங்குள்ள வயல்வெளியில் அந்தப் பொருள் விழுந்துள்ளது. இதை வீடியோவாக எடுத்த பொதுமக்கள் அதை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

- Advertisement -

பறக்கும் தட்டில் ஏலியன்கள் வந்துள்ளதாக வதந்தி பரவவும் , அந்த மர்ம பொருளை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் மார்பள்ளி கிராமத்தில் திரண்டனர்.

- Advertisement -

இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு மர்ம பொருளை பொதுமக்கள் நெருங்கிவிடாமல் தடுக்கப்பட்டது.

ஆந்திரா மாநிலத்தில் மர்ம பொருள் பறக்கும் வீடியோவும், அந்த பொருள் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Aliens Videos சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Aliens Videos சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று முதல்கட்ட தகவல்களை சேகரித்தனர். காவல்துறையினரின் விசாரணையில் அந்த மர்ம பொருள் ஒரு ஹீலியம் பலூன் எனத் தெரியவந்தது.

இதையடுத்து பிளானட்டரி சொசைட்டி ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஹீலியம் பலூன் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அந்த ஹீலியம் பலூனில் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்ட அறிவியல் ஆராய்ச்சிப் பொருட்கள் இருந்ததாகவும். அவற்றைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டதில், அந்த பலூன் புவியின் மேற்பரப்பு ஆராய்சிக்காக அனுப்பப்பட்டது என்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பேசிய பிஎஸ்ஐ (planetary Society of India) அமைப்பின் தலைவர் ரகுநந்தன், இந்த ஹீலியம் பலூன் டிஎஃப்ஐஆர்( Tata institute for Fundamental Research) மற்றும் இஸ்ரோவின் கூட்டு முயற்சியாக வானில் பறக்கவிடப்பட்டதாகவும்,

இந்த பலூனில் இருக்கும் நவீன உபகரணங்கள் மூலம் புவியின் மேற்பரப்பில் நிலவும் காற்றின் ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் திசை, காற்றழுத்தம் ஆகியவற்றை கண்காணித்து பருவநிலை மற்றும் வானிலை மாற்றங்களை கணிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

Kidhours – Aliens Videos

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.