Thirukkural 77 தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால் / இல்லறவியல் / அன்புடைமை
”என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். ”
![என்பி லதனை வெயில்போலக்....... தினம் ஒரு திருக்குறள் கற்போம்... Thirukkural 77 1 Thirukkural 77 தினம் ஒரு திருக்குறள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/11/thinam-oru-kural-kidhours-4-1.jpg)
எலும்பில்லாத புழுப்பூச்சிகளை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பில்லாதவனை அறமானது காய்ந்து வருந்தச் செய்யும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
—மு. வரதராசன்
எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.
—சாலமன் பாப்பையா
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 77
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.