Climate Change Compensation உலக காலநிலை செய்திகள்
1990 களில் துருவப் பகுதியில் ஓசோன் படலத்தில் ஓட்டை இருப்பதை கண்டறிந்த பின்னர் காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது.
அதன் பின்னர் பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும் அதன் தீவிரத்தை குறைக்கவும் ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1994-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்த திட்டத்தில் இன்று வரை 198 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தை சமநிலையில் வைத்துக்கொள்ளவும் மேலும் சேதங்கள் ஏற்படாமல் சமாளிக்கவும் 1995 முதல் ஆண்டுதோறும் பருவநிலை மாநாடு நடத்தப்படுகிறது. அதில் அந்தந்த ஆண்டில் தீவிரம் பெரும் பிரச்சனைகள், பருவநிலை மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
பருவநிலை மாற்றங்களை சமாளிக்க முடியாத நாடுகளுக்கு மற்ற நாடுகள் உதவி செய்யும். வளர்ந்த , வளரும், ஏழை நாடுகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து கிரகத்தை பாதுகாக்க நடத்தும் பணி இது.
அந்த வகையில் ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டத்தின் 27-வது மாநாடு எகிப்து நாட்டின் ஷார்ம் எல் ஷேக் நகரில் கடந்த நவம்பர் 6-ந்தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான தங்களின் பரிந்துரைகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து உரையாற்றினர்.
இந்த மாநாட்டில் முக்கியமாக பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் இழப்பீடு வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இழப்பு மற்றும் சேத நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாடுகள் ஒப்புக்கொண்டன.
இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் எனவும், இதன் மூலம் வளரும் மற்றும் ஏழை நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முதல் முறையாக இது போன்ற ஒரு இழப்பு மற்றும் சேத நிதியை நிறுவ ஒப்புக்கொண்டுள்ளது
நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின்படி, இந்த நிதியானது ஆரம்ப கட்டங்களில் வளர்ந்த நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் போன்ற பிற பொது மற்றும் தனியார் ஆதாரங்களில் இருந்து நிதியுதவி பெறும் .
வளர்ந்த நாடுகளின் வகையின்கீழ் வரும் சீனா போன்ற பெரிய பொருளாதாரங்கள் இந்த நிதிக்கு பங்களிக்காது என்றாலும், அதிக அளவில் மாசுபடுத்தும் காரணத்தால் , நிதியத்திற்கு நிதியளிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவும் வாதிட்டன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, காலநிலை மாற்றத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட ஏழை நாடுகள் மட்டுமல்லாமல் நடுத்தர வருமான நாடுகளும் உதவி பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளது. பல வல்லுநர்கள் இந்த முடிவைப் பாராட்டியுள்ளனர் .
மேலும் இது காலநிலை மாற்ற மாநாட்டின் நேர்மறையான விளைவு . ஏனெனில் இந்த நிதி குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உயிர்நாடியாக இருக்கும் என்று உலக வளக் கழகத்தின் தலைவர் அனில் தாஸ்குப்தா குறிப்பிட்டுள்ளார்.
Kidhours – Climate Change Compensation
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.