Big Dams சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் கலிபோர்னியா-ஓரிகான் எல்லையில் உள்ள நான்கு அணைகளை அகற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா கிளாமத் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் அணைகள், சினூக் சால்மன் மீன்கள் இனம் அழிந்து வர காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
எனவே, இந்த நான்கு அணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூரோக் பழங்குடியினர் நீண்ட காலமாக கூறி வந்தனர்.
இந்த நிலையில் கலிபோர்னியா – ஓரிகான் எல்லையில் உள்ள நான்கு அணைகளை அகற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஃபெடரல் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அணை இந்த அணைகளை அகற்றுவதற்கு ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேவேளை இதுவே அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய அணை அகற்றும் பணியாகும்.
இதன்மூலம் கிளாமத் ஆற்றின் ஆரோக்கியம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து யூரோக் பழங்குடியினரின் தலைவர் ஜோசப் ஜேம்ஸ் கூறுகையில்,
‘ கிளமத் சால்மன் வீட்டிற்கு வருகிறது. மக்கள் இந்த வெற்றியைப் பெற்றுள்ளனர். இதன்மூலம், காலத்தின் தொடக்கத்தில் இருந்து எங்கள் மக்களைத் தாங்கிய மீன்களுக்கு நாங்கள் எங்கள் புனிதக் கடமையைச் செய்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
Kidhours – Big Dams
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.