Friday, January 31, 2025
Homeகல்விசுற்றாடல்மழை வீழ்ச்சிப் பருவங்கள்

மழை வீழ்ச்சிப் பருவங்கள்

- Advertisement -

இலங்கையின் வருடாந்த மழை வீழ்ச்சி நான்கு தெளிவான பருவங்களை கொண்டுள்ளது. அவை தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று,வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்று இருவங்களுக்கிடைப்பட்ட இரண்டுப் பருவகள் என்பனவாகும்.
மழை வீழ்ச்சி_rainy season
1.தென் மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று

- Advertisement -

தென் மேல் பருவப்பெயர்ச்சிக்காற்று ஜீன் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதி ஆகும். இக்காலப்குதியில் மத்தியமலைநாட்டின் மேற்கு,தென்மேல் சரிவுகளில் அதிகூடிய மழை கிடைக்கப் பெருகின்றது.

மேற்கு,தெற்கு,மேல் தாழ் நிலங்களிற்கு குறைந்தளவான மழை கிடைக்கப் பெருகினறது.

- Advertisement -

2.வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்று

- Advertisement -

வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்று ஜனவரி பெப்ரவரி காலங்களில் கிடைக்கப் பெருகின்றது. இது மத்திய மலைநாட்டின் மேற்கு,தென்மேல் சரிவுகளில் அதிகூடிய மழை கிடைக்கப் பெருகின்றது. குறைந்தலவான மழை வீழ்ச்சியானது மேற்கு தெற்கு,தென்மேல் தாழ் நிலப்பகுதிகளில் கிடைக்கப்பெருகின்றது.

பருவங்களிற்கு இடைப்பட்டப் பருவம்

பருவங்களிட்கு இடைப்பட்ட மாதங்களில் (மார்ச்-ஏப்ரல்இ ஒக்ரோபர்-நவம்பர்) மேற்காவுகை செயற்பாடு மூலம் மழை கிடைக்கப் பெருகின்றது. அடிக்கடி உருவாகும் காலநிலை ஒழுங்கமைப்புக்கள் (குறைந்தளவான வளிமண்டலதடைகள்,தாழமுக்கம், சூறாவளிப்புயல்) என்பனவற்றின் காணமாக ஒக்ரோபர்,நவம்பரில் அதிகளவான மழைபெய்கின்றது. இந்தநான்குபருவங்களிற்கு இடைப்பட்டமாதங்களில் முதலாவது இரண்டும் “முதலாவதுபருவங்களிற்கு இடைப்பட்ட பருவக்காலம்”என அழைகக்ப்படும். இதேவேளைகடைசி இரண்டு மாதங்களும் “இரண்டாவது பருவங்களிற்கு இடைப்பட்ட பருவக்காலம்”எனஅழைக்கப்படும். பகல் வேளையில் வெப்பத்தோடு,மாலையில் இடியுடன் கூடிய மழைபெய்யும்.

மழை வீழ்ச்சி_rainy season

காலநிலை வருடம் /நீரியல் வருடம்

இலங்கையின் காலநிலையியல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படிகால நிலைவருடம் அல்லது நீரியல் வருடம் ஜனவரியில் இல்லாது மார்ச்சில் ஆரம்பமாகின்றது என அறியப்பட்டுள்ளது.நான்கு மழைவீழ்ச்சிப்பருவங்கம் ஒரோ அளவிலான மழைவீழ்ச்சியை முழு நாட்டிற்கும் தருவதில்லை. இதனாலேயே குறைந்த நிலப்பரப்பாக காணப்பட்டாலும் நாட்டில் அதிகளவான தொரு விவசாயச் சுற்றாடல் வலயங்களின் பல்லினத்தன்மை காணப்படுகின்றது.

நான்கு மழை வீழ்ச்சிப் பருவங்களில், இரண்டு தெடர்ச்சியான மழை வீழ்ச்சிப்பருவங்கள் இலங்கையின் பிரதான பயிர்ச்செய்கை பருவங்களான சிறுப்போகம் காலப்போகம் எனபனவற்றை தோற்றுவக்கின்றன. பொதுவாக சிறுப்போகம் முதலாவது பருவங்களிற்கு இடைப்பட்ட பருவத்தினதும்,தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று பருவத்தினதும் சேர்க்கையாகும். எனினும் சிறுப்போகத்தின் போது தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று, மழை உலர் வலயதில் போதியலவான மழையைத் தருவதில்லை.

மழை வீழ்ச்சி_rainy season மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் ஆரம்பம் வரையான சிறுப்போகத்தில் முதலாவது பருவங்களிற்கு இடைப்பட்ட பருவமழையின் காரணமாகவே உலர்வலயத்தில் மழை பெய்கிறது. வினைத்திரனான மழை வீழ்ச்சியை இரண்டு மாதங்களிற்கு மாத்திரமே பெருவதனால் சிறுப்போகம் சிறிய பயிர்ச்செய்கை காலமாக கருதப்படுகிறது. முழு நாட்டினதும் பிரதான பயிர்ச்செய்கைப் பருவமான காலப்போகம் செப்ரெம்பர் மத்தி/ஒக்ரோபரில் இரண்டாவது பருவங்களிற்கு இடைப்பட்ட பருவமழையூடன் ஆரம்பித்து, ஜனவரி இறுதி/பெப்ரவரிஆரம்பம் வரைவடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்று மழையூடன் தெடரும்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.