Japan Earthquake உலக காலநிலை செய்திகள்
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் இன்று மதியம் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது.
உள்ளூர் நேரப்படி மாலை 5.09 மணியளவில் (இந்திய நேரப்படி மதியம் 1.39) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மத்திய மீ மாகாணத்தில் சுமார் 350 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டோக்கியோ உள்ளிட்ட பிற நகரங்களிலும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டோக்கியோவுக்கு வடக்கே உள்ள புகுஷிமா மற்றும் இபராக்கி மாகாணங்கள், நில நடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போதிலும், கடுமையான நில அதிர்வை உணர்ந்தன. இதனால், வீடுகள், கட்டடங்கள் குலுங்கின.
பொது மக்கள் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் மற்றும் டோக்கியோ மெட்ரோ சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன.
பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டன. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம், உயிர் சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை
Kidhours – Japan Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.