Singapore Tourist Issues சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சிங்கப்பூரில் அதிகரிக்கும் வீட்டு வாடகை நாட்டில் வசிக்கும் வெளிநாட்டுத் திறனாளர்களையும் வாடகை வீட்டை நாடும் சிங்கப்பூரர்களையும் பாதிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இதனை கூறியிருக்கிறார். வெளிநாட்டினர், வாடகை தவிர்த்து உலக வர்த்தக நடுவமான சிங்கப்பூரின் பல சிறப்புமிக்க அம்சங்களைக் கருத்திற்கொண்டு இங்குத் தங்குவதா வேண்டாமா என்ற முடிவை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம், வீட்டு வாடகைச் சந்தையை அணுக்கமாய்க் கண்காணித்துவருவதாக அமைச்சர் கூறினார். இவ்வாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வ பதில் அளித்த திரு. லீ, கோவிட்-19 நோய்ப் பரவலால் புதிய வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன என்றார்.
வீடுகளுக்கான தேவையும் கூடியதாக அவர் சொன்னால். வீட்டு வாடகை கூடியதற்கு இவையே காரணங்கள் என்று அவர் சுட்டினார். இந்நிலையில் சிங்கப்பூரில் தனியார் வீடுகளுக்கான வாடகை, இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் 8.6 விழுக்காடு அதிகரித்திருப்பதாய் நகரச் சீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் அதுவே ஆக அதிகம். வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் வாடகைகளும் அதிகரித்துள்ளன. காலாண்டு அடிப்படையில், இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் அது மேலும் 7.5 விழுக்காடு அதிகரித்தது. இவ்வாண்டின் முதல் 9 மாதங்களில் கழக வீட்டு வாடகைகள் சுமார் 21 விழுக்காடு அதிகரித்தன.
இடைக்காலத்தில், வாடகை வீடுகளைத் தேடும் சிலர் அதிகரிக்கும் வாடகையால் முயற்சியைக் கைவிடக்கூடும் என்று One Global குழுமத்தின் மூத்த ஆய்வாளர் மோகன் சந்திரசேகரன் CNAயிடம் கூறினார்.
இருப்பினும், அடுத்த ஆண்டு பல புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடையவிருப்பதால், வாடகைகள் அதிகரிக்கும் விகிதம் மெதுவடையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Kidhours – Singapore Tourist Issues .
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.