Thirukkural 63 தினம் ஒரு திருக்குறள்
அறத்துப்பால் / இல்லறவியல் / மக்கட்பேறு
” தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.”
![தினம் ஒரு திருக்குறள் கற்போம்... Thirukkural 63 1 Thirukkural 63 தினம் ஒரு திருக்குறள்](https://www.kidhours.com/wp-content/uploads/2022/10/thinam-oru-kural-kidhours-4-1-1.jpg)
‘தம் பொருள்’ என்று போற்றுதற்கு உரியவர் தம் மக்களேயாவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் எல்லாம் அவரவர் வினைப்பயனால் வந்தடையும்
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.
—மு. வரதராசன்
பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.
—சாலமன் பாப்பையா
தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை
—மு. கருணாநிதி
Kidhours – Thirukkural 63
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.