மழை காலங்களை விடவும் வெப்ப நிலைகாலங்களில் மிகவும் சுவையான பழங்களை வகை வகையாக கடைகளில் பல நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது. இதனால் வெப்பம் நிலவும் காலப்பகுதிகளில் சிறுவர்கள் பெருமளவில் பழங்களை கடைகளில் வாங்கி உண்ண விரும்புகிறார்கள். குறிப்பாக நம் நாட்டில் பேரிக்காய், பிளம்ஸ், மூலாம்பழம்,தர்பூசணி,செரிபழம் போன்றவை அமெரிக்கா,இந்தியா, ஜேர்மன்,பாகிஸ்தான் மற்றும் ஜக்கிய அரபு நாடுகளிலிருந்து விசேடமாக வெப்ப நிலைகாலங்களுக்கு எனவே இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்து வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய சந்தைக்கு கொண்டு வரப்படும் பழங்கள் இடையிலேயே ஈக்களால் சேதம் ஆகின்றது. இல்லையெனில் விற்பனையின் பின்னும் ஈக்களால் பழுதடைகின்றது. வெப்பகாலங்களில் அதிகளவான ஈக்கள் நம்மை சுற்றியும் சமையலறை மற்றும் வீதிகளில் வாகனங்களை ஓட்ட முடியாத படி சுற்றி திரிவதை காணலாம் இவற்றிலிருந்து பழங்களை பாதுகாப்பது அவசியமானதொன்றாகும். எனவே பழ ஈக்களில் இருந்து பழங்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.
1. எளிமையாகஉருவாக்க கூடிய பழ ஈபொறி
ஓரு மேலோட்டமான கிண்ணம் அல்லது ஜாடியினை எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் ஓரு சொட்டு ஆப்பிள் சாறு ஒரு சொட்டு வினிகரி மற்றும் பாத்திரங்களை கழுவ நீங்கள் பயனபடுத்தும் திரவத்திலும் ஒரு சொட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். அவற்றை நன்றாக கலக்கி விட்டு கிண்ணத்தினை நீங்கள் பார்த்த அதிக ஈக்கள் பறக்கும் இடத்தில் வைத்துவிடுங்கள். வினிகரின் மேற்பரப்பில் ஈக்கள் வந்து தரையிறங்கும் ஆனால் பாத்திரங்கள் கழுவ பயன்படும் திரவத்தினால் வினிகரின் மேற்பரப்பு உடைந்து ஈக்கள் மூழ்கிவிடும்
2. வைன் மற்றும் பீர் போத்தல் பொறி
வினிகர் வாசத்தைப் போன்றே வைன் மற்றும் பீர்வாசனையும் பழ ஈக்களை கவர்ந்திழுக்கும் எனவே திறந்தவைன் போத்தில் ஒன்றை எடுத்து அதன் அடியில் சிறிதளவுவைன் மீதியை வைத்து அதனுடன் பாத்திரங்களை கழுவ நீங்கள் பயனபடுத்தும் திரவத்திலும் ஒரு சொட்டு சேர்த்துக்கொள்ளுங்கள்.வைன் வாசத்தினால் கவரப்படும் ஈக்கள் போத்தலின் கழுத்து பகுதின் உதவியுடன் போத்தலுக்குள்ளே மூழ்கும்.
3. அழுகிய பழங்களை பயன்படுத்துதல்
ஒரு ஜாடியில் அழுகிய பழங்களை எடுத்து பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை பிளாஸ்டிக் மடக்கு மூடு பனிகளை கொண்டு சுற்றி ஒட்டி கொள்ளுங்கள். பின்னர் அவற்றின் இடையே சிறு துளைகளை இட்டு கொள்ளுங்கள். அதனை அதிக ஈக்கள் பறக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.ஈக்கள் இலகுவாக உள்ளே செல்லும் ஆனால் வெளியே வர முடியாமல் சிக்கிவிடும்.
4.காகித கூன் முறை
ஓர் ஜாடியினை எடுத்து அதனுள் நன்கு கனிந்த பழ துண்டு ஒன்றினையும் ஒரு சொட்டு வினிகரையும் சேர்த்து ஒரு இடத்தில் வைக்கவும். காகிதத்தினை கோன் குழாய் போன்று சுருட்டி ஜாடியினுள் ஒரு குச்சியுடன் சேHத்துவைக்கவூம். கனிந்த பழ துண்டின் வாசைன ஈக்கள் ஜாடிக்குள் வருவதற்கு உதவி செய்யும். கோன் குழாய் ஈக்கள் வெளியேற முடியாத படி கடினமாக மாற்றும். இதனை உரமாகவோ அல்லது மறு சுழற்சி செய்தும் புனல் ஆக பயன்படுத்தலாம்.
5.மெழு குவர்த்தி பொறியை உருவாக்குதல்
ஓர் ஆழமான பாத்திரத்தில் முழுவதுமாக நீர் நிரப்பி பாத்திரங்களை கழுவ நீங்கள் பயன்படுத்தும் திரவத்திலும் ஒரு சொட்டு சேர்த்து அதனுள் ஓர் மெழு குவர்த்தியை நிறுத்தி கொள்ளுங்கள். பின்னர் மெழுகுவர்த்திக்கு ஒளி ஏற்றுங்கள் பின்னர் அதனை அனைத்து விடுங்கள் இவ்வாறு மாறி மாறி செய்யும் போது ஈக்கள் நெருப்பு அல்லது திரவத்திற்குள் போகும்.
6. ஆன்ற் பனீஸ் பிளை பஞ்ச்
சில மக்கள் ஆன்ற் பனீஸ் பிளை பஞ்ச் ஜ பரிந்துரை செய்கின்றனர். ஆன்ற் பனீஸ் பிளை பஞ்ச் ஓர் நச்சு தன்மையற்ற பழ ஈக்களை அழிக்க கூடிய பொருள். மிகவும் பாதுகாப்பானதும் உணவுகளுக்க அருகில் வைப்பதற்கும் செல்ல பிராணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்காததுமாகும். இது பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவானது. நீங்கள் அதன் மேற் புறத்தை சற்று புரட்டி விட்டதும் அது ஈக்களை கவர்ந்து இழுக்க தொடங்கும். 30 நாட்களுக்கு ஒரு முறை அதன் மேற் புறத்தை திறப்பதனால் இறந்த ஈக்களை வெளியேற்ற முடியும்.
பழ ஈக்களை தடுப்பதற்கான குறிப்புக்கள் மற்றும் தந்திரங்கள்
• பழுத்த பழங்களை வெளி இடங்களில் வைக்க கூடாது. அவ்வாறு வைத்தால் அவற்றை காலை உணவுக்காக உறை பனியில் வைத்துமே லோட்டமாக உண்ணவும் அல்லது எறிந்துவிடவும்.
• குளிர் சாதன பெட்டிக்குள் பழங்கள் மற்றும் காய்கறிகளை வைக்கவும்.
• விற்பனை நிலையங்களிலிருந்து பழங்கள் மற்றும் காய் கறிகளை வாங்கி வந்த உடனே முட்டை அல்லது துளர்வாக்கிகளினால் சுத்தமாக கழுவி விடவும்.
• உங்கள் வீட்டு குப்பைத் தொட்டிகளை தினமும் அகற்றி விட வேண்டும்;. குப்பைத் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்கவும்.
• பழச்சாறு அல்லது அல்ககால் போன்றவை நிலத்திலோ மேசையிலோ கொட்டினால் அவ்விடத்தை உடனடியாக சுத்தம் செய்யவும்.
• சமையலறை துடைப்பான்களையோ அல்ல துறாக்குகளையோ அவற்றை பயன்னடுத்திய பிறகு ஈரமாக வைத்திருக்க வேண்டாம். முடிந்தளவு தினமும் அவற்றை கழுவி சுத்தம் செய்து வைக்கவும் இதனால் பழ ஈக்களின் இனப்பெருக்கம் தடைப்படும்.
• வீட்டு சமையலறையின் சுத்தம் செய்யும் தொட்டியின் கழிவு நீர் அகற்றும் குழாயை அப்பிள் வினிகரி கொண்டு நன்றாக சுத்தம் செய்யவும்.
• சமையலறை விசிறியை இயக்குதல்.
• பழ ஈக்களை விரட்ட துளசி செடியைஉங்கள் வீடுகளில் நாட்டிக் கொள்ளவும். துளசி இலைகளை நேரடியாக பழங்கள் மீது போடவும். பழ ஈக்கள் வலுவான வாசனையை விரும்புவதில்லை என வேலா வெண்டர் எண்ணெயில் ஊறவைத்த துணியை பழ மேசைகளில் வைக்கவும்.
• ஒருசொட்டு இலங்க பாட்டை எண்ணெய்யைவயும் ஒரு சொட்டு சித்திர நெல்லா எண்ணெய்யையும் ஒரு சொட்டு கேதுருபட்டை எண்ணெய்யையும் ஓர் எண்ணெய் விரைவியில் இட்டு விசிறி கொள்ளவும். இது பழ ஈக்களை மட்டு மல்ல வீட்டு ஈக்களையும் முற்றாக அளிக்க கூடியது.
வீட்டில் உருவாக்க கூடிய அனைத்து வகையான ஈக்களையும் விரட்டும் தெளிப்பான்
தேவையானபொருட்கள்
1. பேக்கிங் சோடா 1 டிஸ்பூன்
2.சூடான நீர் 2 கப்
3.வெள்ளை வடிகட்டிய வினிகரி 1 கப்
4.எலுமிச்சை சாறு 3 டிஸ்பூன்
5.எலுமிச்சைசுவைஎண்ணெய் 5-10 துளி
ஒரு உலோக மல்லாத கிண்ணத்தில் 2 கப் நீரை ஊற்றி பேக்கிங் சோடாவை இட்டு அது நன்றாக கரையும் வரை கலக்கிவிடவும். வினிகரை சேர்த்து தொடர்ந்து அலசவும். பின்னர் மீதமுள்ள பொருட்களையும் சேர்க்கவும். சிறிதுநேரம் கழித்து நன்றாக அலசவும். பின்னர் தெளிப்பன் போத்தலில் இடம் மாற்றி மாதம் ஒரு முறை வீடு முழுவதும் தெளித்து கொள்ளவும்.