Saturday, November 16, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புஇஸ்ரேல் புதிய பிரதமர் Israel New Prime Minister

இஸ்ரேல் புதிய பிரதமர் Israel New Prime Minister

- Advertisement -

Israel New Prime Minister பொது அறிவு செய்திகள்

- Advertisement -

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

இஸ்ரேலில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் நெதன்யாகு. லிகுட் கட்சியை சேர்ந்த இவர் 15 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

- Advertisement -

1996 முதல் 1999 வரையும், 2009 முதல் 2021 வரையும் இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவி வகித்துள்ளார்.

- Advertisement -

கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சி மூலம் நெதன்யாகு பிரதமரானார்.

ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவை இழந்ததால் நெதன்யாகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

Israel New Prime Minister பொது அறிவு செய்திகள்
Israel New Prime Minister பொது அறிவு செய்திகள்

 

இதனைத்தொடர்ந்து நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யாமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார்.

இஸ்ரேல் பிரதமராக நப்தாலி பென்னட் (Naftali Bennett) தலைமையிலான அரசு சுமார் ஓராண்டு காலம் ஆட்சி செய்த நிலையில், கடந்த ஜூன் மாதம் அவரது அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப்பெற்றன.

இதனால் அந்த நாட்டின் நாடாளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது. நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் (Yair Lapid) நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, அறிவிக்கப்பட்டபடி இஸ்ரேலில் நேற்று பொதுத்தேர்தல் நடந்தது. இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் ஆகும்.

இத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகும் – யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது. வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.

மொத்தமுள்ள 120 தொகுதிகளில் பதிவான வாக்குகளில் 86 சதவிகித வாக்குகள் தற்போது எண்ணப்பட்டுள்ளன. அவற்றில், 65 தொகுதிகளில் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் இஸ்ரேலின் புதிய பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு வெற்றிபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

எஞ்சிய வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதால் இஸ்ரேலின் புதிய பிரதமராக நெதன்யாகு மீண்டும் தேர்தெடுக்கப்பட உள்ளதால் அவரது கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

 

Kidhours – Israel New Prime Minister .

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.