Dangerous Plant in the World சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பகுதியை சேர்ந்த நபர், சாதா செடிகளை தமது தோட்டத்தில் வளர்ப்பதில் சுவாரசியம் தரவில்லை எனக் கூறி உலகின் மிக ஆபத்தான செடி ஒன்றை வளர்த்து வருகிறார்.
அவுஸ்திரேலியாவில் காணப்படும் அரியவகையான gympie-gympie என்ற மிகவும் ஆபத்தான செடியையே 49 வயதான Daniel Emlyn என்பவர் வளர்த்து வருகிறார்.
குறித்த செடியின் விதைகளை இணையமூடாக வாங்கிய அவர், தனியாக ஒரு தொட்டிக்குள் வளர்த்து வருகிறார்.
பொதுவாக தோட்டங்களில் இதுபோன்ற செடிகளை வளர்ப்பது ஆபத்து என்பதால், அதன் விதைகளை கவனமுடன் கையாள வேண்டும் என Daniel Emlyn கூறுகிறார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து, சுமார் 60 அவுஸ்திரேலிய டொலர் செலவிட்டு, விதைகளை வாங்கியுள்ளார்.
குறித்த செடியின் முற்கள் பட்டு காயம் ஏற்பட்டால், அந்த வலி பல வாரங்கள் அல்லது மாதம் வரையில் இருக்கும் எனவும், உயிர் போகும் வலியாக அது இருக்கும் எனவும் Daniel Emlyn கூறுகிறார்.
ஆபத்தான gympie-gympie செடியை வளர்க்கும் அவர், அதனை தற்போது ஒரு கூண்டுக்குள் வைத்துள்ளார்.
சில முறை காயம்பட நேர்ந்தது எனவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக சிக்கல் ஏதும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Kidhours – Dangerous Plant in the World
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.