17 Missile Testing சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வட கொரியா ஒரே நேரத்தில் 17 உயர் ஆற்றல் கொண்ட ஏவுகணைகளை சோதித்தது, அதில் ஒன்று தென் கொரியாவின் கடற்கரையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் தரையிறங்கியது.
அதே சமயம் தென்கொரியாவின் வான் தாக்குதல் எச்சரிக்கை ஹாரன்கள் இயக்கப்பட்டு பதிலுக்கு தென்கொரிய போர் விமானங்கள் மூன்று நிலப்பரப்பு ஏவுகணைகளை வடகொரிய கடலை நோக்கி செலுத்தியுள்ளன.
மேலும், வடகொரியாவின் ஏவுகணை தென்கொரிய கடல் அருகே தரையிறங்குவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
வடகொரியா ஒரே நாளில் சோதனை செய்த அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகள் இது என்றும் கூறப்படுகிறது.
வடகொரியாவின் ஆத்திரமூட்டல்களுக்கு பதிலடி கொடுப்பதாக தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல்(Yoon Suk Yeol) தெரிவித்ததை அடுத்து தென்கொரிய போர் விமானங்கள் இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
Kidhours – 17 Missile Testing
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.